கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்.@கலாத்தியர் 3:13
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

பிலிப்பு பவுல் பிலிஸ், 1876 (My Re­deem­er). சௌ. ஜான் பாரதி (2018),

பர்ன்லே, பிலிப்பு பவுல் பிலிஸ், 1877 (🔊 pdf nwc).

உருவப்படம்
பிலிப்பு பவுல் பிலிஸ்
(1838–1876)

பிலிப்பு பவுல் பிலிஸ் 1876, துரதிருஷ்டவசமாக பிலிஸ் அவர்கள் இப்பாடலை எழுதிய சில மணித்துளிகளுக்குள் இரயில் விபத்தில் தன் மனைவி மரிக்க, காப்பாற்ற சென்ற அவரும் உயிரிழந்தார். விபத்துக்கு பின்னர் இப்பாடல் அவரது உடமைகளுக்குள் கண்டெடுக்கப்பட்டது.

மேலும் இப்பாடல் ஜார்ஜ் ஸ்டெபின்ஸ் என்பவரால் இசைதட்டு ஒலிப்பதிவை கண்டுபிடித்த தாமஸ் எடிசன் அவர்களின் செயல்விளக்க மாதிரியாக, நியூயார்க் நகரில் முதல் முதல் இசைத்தட்டில் ஒலிப்பதிவான பாடல் என்பது குறிப்பிடத்தக்கது, தமிழிலும் பாடப்படவேண்டிய பாடலாக கருதி மொழிபெயர்த்தேன்.

சௌ. ஜான் பாரதி, 2018

என் மீட்பர் அன்பை என்றென்றும் நானே,
போற்றி பாடி புகழுவேன்,
அவர் எனக்காய் சிலுவையிலே,
துன்புற்று மாண்டார், எனக்காக,

பல்லவி

போற்றிப்பாடுவேன் மீட்பர் அன்பை,
இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டாரே,
சிலுவையாலே என்னை மன்னித்தார்,
என் கடன் தீர்த்தே தந்தாரே, விடுதலை.

அவர் நற்செய்தி யாவர்க்கும் சொல்வேன்
அளவில்லாத அவர் அன்பு, இலவசமாய்
நம்மை இரட்சித்தார், அவரின் அன்பை,
எங்கும் சொல்வேன்,

சாவின் மீதே ஜெயம்கொண்டாரே,
எங்கும் நான் சொல்வேன் அவர் மாண்பை,
மரணமே உன் கூர் எங்கே, எங்கே?
பாதாளமே உன் ஜெயமெங்கே,

இயேசுவின் அன்பு தெய்வீக அன்பு
என்னையும் மீட்டார், முற்றிலுமாய்
தேவகுமாரன் தம்முடன் வாழ,
இன்றும் என்றும் நித்தியமுமாய்.