இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்.@மாற்கு 14:41
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

ஹுன்றி வில்லியம்ஸ் பேக்கர், 1875 (My Fa­ther, for An­o­ther Night). சௌ. ஜான் பாரதி (மார்ச் 3, 2019),

தூய தீமோத்தி, ஹுன்றி வில்லியம்ஸ் பேக்கர், 1875 (🔊 pdf nwc).

உருவப்படம்
ஹுன்றி வில்லியம்ஸ் பேக்கர்
(1821–1877)

மற்றோர் இராவும் நல் ஓய்வுமே
அன்பாக ஈந்தீரே,
இக்காலையின் எல்லா நன்மைக்கும்
போற்றுகிறோமே.

இந்நாளே என்னை முற்றுமே
நான் தந்தேன் உமக்கே,
உம் சித்தம் செய்தே வாழ்த்துவேன்
நீர் என்னை நடத்தும்.

நான் என்ன செய்திட்டாலுமே
சிந்தித்துப் பேசவும்,
உம் மகிமைக்கே யாவுமே
உம் நாமத்தினாலே.

நான் வேண்டுகிறேன் ஆண்டவா
நான் உந்தன் பிள்ளையே,
நீர் என்னை ஏற்று ஆசீர் ஈந்து
நடத்திடுமே.