என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிகவும் பெரியவராயிருக்கிறீர்; மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர்.@சங்கீதம் 104:1
portrait
சாமுவேல் ஸ்டென்னட்
(1727–1795)

சாமுவேல் ஸ்டென்னட் (1727–1795) (Ma­jes­tic Sweet­ness Sits En­throned). சௌ. ஜான் பாரதி (ஏப்ரல் 29, 2019),

ஆர்டோன்வில்லே, தாமஸ் ஹேஸ்டிங்ஸ் (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

கெம்பீரமாய் அதோ அங்கே
என் மீட்பர் காண்கிறேன்,
பார் கிரீடம் சூடி மின்னுதே,
நமக்காசீர் பேணுதே,
நல் ஆசீர் பேணுதே.

ஆம் எல்லா நாவும் போற்றுமே
அவர் மகிமையை,
நம் பாடலின் பொருள் அவர்,
எவர் பாடாதொழிவார்?
நான் பாடேன் என்பாரோ?

ஆராய்ந்து பார் நம் ஆண்டவர்
அன்பான தோற்றமே,
வல்லமை யாவும் ஆராய்ந்து,
அவர் மாட்சி போற்றுவாய்,
எல்லோர்க்கும் சொல்லுவாய்.

எம்மாந்தரும் ஒப்பாகாரே
எம்மானிடருமே,
எல்லோரிலும் பிரகாசமாய்,
சேனையாவும் காண்கிலும்,
எங்கே நாம் தேடினும்.

கண்டார் என்னை என் துன்பத்தில்
வந்தென்னை காத்தாரே,
எனக்காய் மாண்டே மீட்டாரே,
எந்தன் சாபம் தீர்த்தாரே,
என் வேதனையுமே.

நல் ஆசீர் பொங்கும் தாங்குமே,
நம் தீய கைகள்மேல்,
ஆம் வீசுமே பிரகாசமாய்,
நானும் தூங்கும் நேரமே,
நாம் தூங்கும் வேளையில்.

என் ஸ்வாசம் வாழ்வு யாவுமே,
என் உள்ளம் இன்பமும்,
என் சாவின் மீது வெல்வேனே,
அவர் என்னை மீட்டாரே,
என்னை இரட்சித்தாரே.

தம் வான வீட்டிற்கென்னையும்,
அழைப்பார் உண்மையாய்,
தளர்ந்த நானும் காண்பேனே,
அவர் வல்லமைகளே,
நான் ஆனந்தம் போங்க.

என் ஆண்டவரின் ஆஸ்தியே,
அன்பாக ஈகிறார்,
நான் ஆயிரம் தான் தந்தாலும்,
அவை யாவும் ஈடாகா,
என் யாவும் அவருக்கே.