அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார், அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம்.@மாற்கு 16: 6
உருவப்படம்
ராபர்ட் லோரி (1826–1899)

ராபர்ட் லோரி, 1874 (நியூயார்க், பிக்லோ & மெய்ன்) (Low in the Grave He Lay). பிரைடஸ்ட் & பெஸ்ட், ல் வெளியானது ஹோவார்ட் -டோனே, மற்றும் ராபர்ட் -லோரி -(நியூயார்க்: பிக்லோ & மெய்ன் 1875) (🔊 pdf nwc). சௌ. ஜான் பாரதி, ஈஸ்டர் 2019.

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி (1960–)

ஆழ கல்லரையில் இயேசு என் ஆண்டவர்,
காத்திருந்தாரவர் இயேசு மீட்பர்.

பல்லவி

ஆண் டவர் உயிர்த்தெழுந்தார்,
வெற்றி கொண்டே சாவின் சாபத்தை,
இருள் மீதே ஜெயம் கொண்டே வீரராய்
இன்றும் வாழ்கிறாரே என்றும் ஆளவே,
எழுந்தார் எழுந்தார், அல்லேலூயா எழுந்தார்.

கல்லரையில் இல்லை இயேசு என் ஆண்டவர்,
மூடினர் வீணன்ரோ? இயேசுவையே.

பல்லவி

மரணம் பற்றாது, இயேசு என் ஆண்டவர்,
உடைத்தெரிந்தாரே, இயேசு மீட்பர்.

பல்லவி