…மழையை நான் தடுத்தேன், ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யவும் ஒரு பட்டணத்தின்மேல் மழை பெய்யாமலிருக்கவும் பண்ணினேன்;…இரண்டு மூன்று பட்டணங்களின் மனுஷர் தண்ணீர் குடிக்க பட்டணத்துக்குப் போய் அலைந்தும் தாகந்தீர்த்துக்கொள்ளவில்லை; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.@ஆமோஸ் 4:7

பவுல் ஹெங்கலின் முதலாம் பதிப்பு நீயூ மார்கெட் விர்ஜீனியா 1816 திருச்சபை ஹிம் புக்கிலிருந்து எண் 360 திருத்தப்பட்டது (Lord, Look on This, Our Pant­ing Earth!). சௌ. ஜான் பாரதி (ஜூன் 25, 2019),

கிளென்சிங் பவுன்டன், 19ஆம் நூற்றாண்டின் செஞ்சுரி அமெரிக்கன் கேம்ப் மீட்டிங் இராகம் (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

ஆண்டவா நீர் பாரும் தாகத்தால்
தவிக்கும் எம் பூமியினை,
சாகும் விதைகள் நோக்கிடும்
காய்ந்தே உலர்ந்த மண்ணையும்,
மழைக்காய் ஏங்கி விம்முதே,
மழைக்காய் ஏங்கி விம்முதே,
காய்ந்தே உலர்ந்த பூமியும்
மழைக்காய் ஏங்கி விம்முதே.

எம் பூமி மலடாய் மணல் திரளாய்
வெஞ்சூர்யன் கீழ் கிடந்தே,
தன்னை பற்றும் செடி கொடி ஏதுமின்றி
யாவும் காய்ந்து மடிந்திடவே,
யாவும் காய்ந்து மடிந்திடவே,
யாவும் காயந்து மடிந்திடவே,
தன்னை பற்றும் செடி கொடி ஏதுமின்றி
காய்ந்து மடிந்திடவே.

வாழும் உயிர்கள் இடரடைந்து
வழியின்றி மாளுதே,
இயற்கை யாவும் மிக ஒடுக்கப்பட
சாபம் தொடர்ந்திடவே,
சாபம் தொடர்ந்திடவே,
சாபம் தொடர்ந்திடவே,
இயற்கை யாவும் மிக ஒடுக்கப்பட
சாபம் தொடர்ந்திடவே.

உம் நியாயத்தீர்ப்பு நீதியே
ஒருபோதும் நீர் ஈயாவிடில்,
இம் மண் மீது சிறு துளி மழையும்
உயிர் பெறுமோ சிறு செடியும்,
உயிர் பெறுமோ சிறு செடியும்,
உயிர் பெறுமோ சிறு செடியும்,
இம் மண் மீது சிறு துளi மழையும்
உயிர் பெறுமோ சிறு செடியும்.

யாம் பேடித்தே நடுங் கியே
எம் குற்றம் உணர்ந்தோம்,
இச்சாபம் எமக்கு உகந்ததே
உம் சித்தமென்றேற்றிடவோ?
உம் சித்தமென்றேற்றிடவோ?
உம் சித்தமென்றேற்றிடவோ?
இச்சாபம் எமக்கு உகந்ததே
உம் சித்தமென்றேற்றிடவோ?

ஆம் பாரமான கரமிதுவே
யாம் இம்மட்டும் அறியாதது,
இவ்வறட்சி தொடர்ந்து நீடித்தால்
பஞ்சம் நிச்சயமல்லவோ?
பஞ்சம் நிச்சயமல்லவோ?
பஞ்சம் நிச்சயமல்லவோ?
இவ்வரட்சி தொடர்ந்து நீடித்தால்
பஞ்சம் நிச்சயமல்லவோ?

எமக்கும் இந்நிலைமை வரலாமே
இப்பாரில் சரித்திரமே,
எம் ஈன பூமியில் நிறைந்துள்ள
பாவக்கறைதான் மிக மிகுதி,
பாவக்கறைதான் மிக மிகுதி,
பாவக்கறைதான் மிக மிகுதி,
எம் ஈன பூமியில் நிறைந்துள்ள
பாவக்கறைதான் மிக மிகுதி.

தயை கூரும் ஆண்டவா கெஞ்சுகின்றோம்
மழை தாரும், மா தயவாய்,
கிருபையாய் எம் பயங்கள் போக்கிடும்
மீண்டும் உம்மை நம்பிடவே,
மீண்டும் உம்மை நம்பிடவே,
மீண்டும் உம்மை நம்பிடவே,
கிருபையாய் எம் பயங்கள் போக்கிடும்
மீண்டும் உம்மை நம்பிடவே.

ஆமேன்.