உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்.@லூக்கா 2:14
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

கிரேஸ் டிக்கின்சன், கிறிஸ்மஸ் கேரல்ஸ் நியூ அன்டு ஓல்டு, மூன்றாம் வரிசையில் ஹென்றி பிராம்லி மற்றும் ஜான் ஸ்டெய்னர் லண்டன் (நொவெல்லோ ஈவர் அன்டு கம்பெனி ஏரத்தாழ 1878), எண் 50 (Let Mu­sic Break on This Blest Morn). இவ்வார்த்தைகள் மாசசூசெட்ஸிலுள்ள பாஸ்டனில் பெனேயுல் ஹால் கொண்டாட்டத்திற்காக எழுதப்பட்டு, ஜூலை 4ஆம் நாள் 1842ல் அந்நகரத்திலிருந்த ஓய்வு நாள் பாடசாலை பிள்ளைகளால் பாடப்பட்டது. சௌ. ஜான் பாரதி (2018),

ஜான் பாப்டிஸ்டு கால்கின், 1848 (🔊 pdf nwc).

உருவப்படம்
ஜான் பாப்டிஸ்டு கால்கின்
1827–1905

இக்காலை கீதம் தொனிக்கட்டும்.
வான்லோகத்திலுமே கேட்கட்டும்,
தம் வாக்கின்படி பிறந்தார்,
நாம் காத்திருந்த மீட்ப்பரே,
ஆம் தீர்க்கர் வாக்குப்போலவே,
இம்மண்ணின் மாந்தர் மகிழவே,
எல்லோரும் சேர்ந்து ஆர்ப்பரித்து
நம் மீட்ப்பர் வருகை வாழ்த்துவோம்,

விண் தூதர் அவரை போற்றிட,
மண்மீதில் நாமும் பாடுவோம்,
நம் மீட்ப்பர் அன்பை போற்றுவோம்,
எல்லோரும் ஒன்றாய் போற்றுவோம்,
விண்தூதர் தீர்க்கர் பாவிகளும்,
வான் லோகில் சேர்ந்தே கூட்டமாய்,

நம் ஆண்டவர், நம் ராஜனாம்,
ஒன்றாக அவரை போற்றியே,
அந்நாமம் அன்றி வேரில்லை,
நாம் போற்றிடுவோம்,
இவ்வன்புக்கு ஏதும் ஈடாகா,
உம் நாமமும் அன்பும் தூயதே
என்றும் தூயதே, அன்பின் நாமமே,
தூய தூயதே,