நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.@சங்கீதம் 32:8
உருவப்படம்
ஜோசப் ரட்யார்ட் கிப்லிங்
1865–1936

ஜோசப் ரட்யார்ட் கிப்லிங், 1906 (Land of Our Birth, We Pledge to Thee). சௌ. ஜான் பாரதி, மே. 19, 2020.

இராகம் டுரூரோ, தாமஸ் வில்லியம், 1906 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

யாம் பிறந்த எம் தேசமே,
எம் அன்பும் சேவையும் ஆண்டாண்டாய்,
யாம் வளர்ந்த எம் இடம் அமர்ந்து,
நல் ஆணும் பெண்ணுமாக இணைந்து

எங்கள் தந்தாய் நீர் அன்பாக,
ஆம் கேளுமே எங்கள் வேண்டுதல்,
வரும் காலம் நாங்கள் கட்டிட,
மறவாமலே எங்கள் முன்னோரை.

வாலிபத்தில் வலிமையாய்,
மெய் ஜாக்ரதையாய் உறுதியுடன்,
எம் காலத்தில் உம் கிருபை தந்திடும்,
சொல் வாய்மையாய், வாழ செய்திடும்.

தன்னைத்தானே நாங்கள் ஆள,
மா கண்யமாய், இரா பகலும்,
நல் தியாகமாய் எத்தேவை வரினும்,
துணிந்தே செயலாற்ற வீரராய்.

ஞானம் தாரும் எம் தேவைக்காய்,
உம் நீதி எங்களை ஆளவே,
எம் நண்பர்கள் வழி அல்லவே,
ஊர் போகும் பாதையில் போகாமல்.

தந்திடுமே உம் வல்லமை,
எம் சொல்லும் செயலும் நேர்மையாய்,
உம் கிருபையால் நலிந்தோர் காக்க,
இம்மண்ணோர் வேதனை தீர்க்கவும்.