அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்@மத்தேயு 1:20–21
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

16 ஆம் நூற்றாண்டில் அன்னை மரியின் தாலாட்டாக ஜெர்மனியிலுள்ள லிப்சிகில் நடைபெற்ற புதிர் நாடகங்களில் பாடப்பட்டுவந்தது (Jo­seph Dear­est). சௌ. ஜான் பாரதி (2018),

ரிசோனட் இன் லாடிபஸ், 14 ஆம் நூற்றாண்டின் ஜெர்மானிய பாரம்பரிய பாடல். குழுவாக சேர்ந்து பாடுவதற்காக ஒழுங்கு படுத்தியவர் ரால்ப் வாகன் வில்லியம்ஸ், 1906 (🔊 pdf nwc).

உருவப்படம்
ரால்ப் வாகன் வில்லியம்ஸ்
1872–1958

1970 ல் நான் சென்னையிலுள்ள தென்னிந்திய திருச்சபையின் பெயின் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயம் இங்கிலாந்திலிருந்து வந்திருந்த ஒரு வயது சென்ற ஆசிரியை பள்ளி அரங்கிலிருந்த பியானோவை இசைத்து பாடகற்குழுவிலிருந்த எங்களுக்கு இந்த பாடலைக் கற்றுத்தந்த விதமும் பியானோவை முதல் முதல் பார்த்ததும் நான் கற்றுக்கொண்ட முதல் பாடலையும் எப்படி மறக்க முடியும். சில பயிற்சிகளுக்கு பின்பு அன்று எங்களிடமிருந்த மிக நல்ல உடைகளையும் கழுத்தில் “போவும்” அணிந்து சென்னை வானொலி நிலையத்திற்கு சென்றது, சில நாட்களுக்குப்பின் ஒலிபரப்பாக நாங்கள் காத்திருந்தது இன்றும் என் நினைவில் மங்காமல் நிலைத்திருக்கின்றது.

சௌ. ஜான் பாரதி, 2018

எந்தன் அன்பு யோசேப்பு,
வந்து பாலனை தூங்கச்செய்
ஆண்டவர் ஆசீர்வதிப்பாரே,
உன்னை விண்ணில்
என்றுரைத்தார் மரியன்னை

பல்லவி

நம் ஆண்டவர் வந்தார் நம்மிடம்
அக்காலத்தில் பெத்லேகேமில்
தூர இருந்து கொண்டு வந்தார்
அன்பின் கிரீடம்.
இயேசு மீட்பர் அன்பு காட்டி
இரட்சித்து விடுவித்தாரே

வந்தேன் இதோ என் அன்பே
தூங்கச்செய்வேன் நம் பிள்ளையை
ஆண்டவர் தரும் ஒளி
நம்மேல் பிரகாசிக்கும்
என்றுரைத்தார் மரியன்னை