என் ஆண்டவரே! என் தேவனே!@யோவான் 20:28
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

வனாந்திரத்தின் பாடல்கள் 1843 ஜேன் கேத்தரின் போனார் (Je­sus Is Mine). இப்பாடலின் முதல் வரி உலக இன்பமே கடந்து போ என்பதாக இருந்தது. சௌ. ஜான் பாரதி (பிப்ரவரி 15, 2019),

லன்டீ, தியோடர் எட்சன் பெர்க்கின்ஸ் 1868 (🔊 pdf nwc).

உருவப்படம்
ஜேன் கேத்தரின் போனார்
(1821–1884)

மங்கி மறைந்திடு, மாய சிற்றின்பம்,
ஒன்றும் வைக்காமலே, முற்றும் எல்லாம் நீங்க.
காடும் வனமுமே, இருளாய் தோன்றுதே,
என் இயேசு மட்டுமே புகலிடமாமே.

சோதித்தென் உள்ளத்தை, காத்திருக்காமல்,
இங்கே நான் என்றென்றும் தங்கிடுவேனோ?
மண்ணல்லோ நானுமே? நாள் ஒன்றே வாழவே,
என்னை நீ தாண்டிச்செல் என் இயேசு என் சொந்தம்.

இரா காணும் சொப்பனம், காலை உதயம்,
என் வாஞ்சை வீணல்லோ? எல்லாமே மாயையே,
என் இயேசு தீர்த்தாரே, பிரியா விடை தந்தேன்,
என் இயேசு மட்டுமே எனக்கு போதுமே.

இம்மையே போகிறேன் மறுமை காண,
ஓய்வின் நல் காட்சியே, மெய் அன்பின் ஆசீரே,
ஆ எந்தன் நேசரின் மார்பினில் சார்ந்திட,
என் இயேசு மட்டுமே அவர் என் சொந்தமே.