எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும்.@சங்கீதம் 121:1–2

ஸ்காட்டிஷ் சால்டர் பிட்ஸ்பர்க் பென்சில்வேனியா ஒருங்கிணைந்த பிரஸ்பிட்டேரியன் வெளியீட்டார் 1912) எண் 345 (I to the Hills Will Lift My Eyes). சௌ. ஜான் பாரதி (பிப்ரவரி 5, 2019),

டண்டி, ஸ்காட்டிஷ் சால்டர் 1615 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி (1960–)

என் கண்களை ஏறெடுப்பேன்,
ஒத்தாசை வருமே,
வானமும் பூமியும்
படைத்தவர் எனக்கீவார்.

உன் பாதம் கல்லில் இடறா,
கண்ணுரங்காமலே,
இஸ்ரவேலரையும் காத்தவர்
உன்னையும் காப்பார்.

உன் கேடகமும் நிழலும்,
அருகிருந்துமே,
இரா சந்திரன் உன்னை ஒன்றும்
செய்யா பகல் சூர்யனும்.

உன் ஆன்மாவையும் காப்பாரே,
எல்லாத்தீங்கினின்றும்,
நீ போகையிலும் வரும் போதும்
காத்தருள்வாரே.