மனுஷருடைய அகங்காரத்துக்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர்.@சங்கீதம் 31:20
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

எல்லென் ல. கோரே, இந்தியாவின் பவளப்பாறையிலிருந்து: கிறிஸ்தவ விசுவாசத்தின் பாடல்கள், 1883 (In the Sec­ret of His Pres­ence). சௌ. ஜான் பாரதி (2018),

ஜார்ஜ் கோல்ஸ் ஸ்டெபின்ஸ் (1846–1945) (🔊 pdf nwc).

உருவப்படம்
எல்லென் ல. கோரே
(1853–1937)

இந்த அழகிய பாடலின் ஆசிரியர் இந்தியாவின் உயர்ந்த ஜாதி வகுப்பை சேர்ந்தவர். கிறிஸ்த்தவளாக மாறிய பின்பு, இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பாதிரியாரின் வீட்டில் சில ஆண்டுகள் தங்கியிருந்து. கவிதைகளும் எழுதிக் கொண்டிருந்திருக்கிறார். அவள் எழுதிய கவிதைகளடங்கிய ஒரு புத்தகமும் வெளிவந்துள்ளது. இப்பாடல் முதன்முறையாக நியூயார்க்கிலுள்ள புரூக்கிளின் ஆலயத்தில் ஜார்ஜ் ஸ்டெபின்ஸ் அவர்களால் காணிக்கை சேகரிக்கும் தருணங்களில் மீண்டும் மீண்டும் பாடப்பட்டதுடன் நற்செய்தி கூட்டங்களிலும் அவ்வப்போது பாடப்பட்டு வந்துள்ளது. ஆனால் திரு மூடி அவர்களும் நானும் நடத்திய குளிர்கால நற்செய்தி கூட்டங்களில் அதிகமான மக்களிடையே பிரபலமானது. லண்டனில் (1883–84) மாதக்கணக்கில் நடைபெற்ற கூட்டங்களில் நாங்கள் அடிக்கடி பாடியுள்ளோம். கர்னல் டுருரி லோவே அவர்கள் மனைவி மங்கை பௌச்சாமின் மகள் செல்வி பௌச்சாம் அவர்கள் இப்பாடலை பல முறை பாடியுள்ளார்கள், அவர்களின் மாமன் கவர்னரும் வைஸ்ராய் ஜெனரலுமான கர்சோன் அவர்கள். இப்பாடல் ஆன்மீக கருத்துடனும் மக்களால் உடனே கவரப்பட்டு விரும்பி பாடப்பட்டு அனேகருக்கு ஆசீர்வாதமாக அமைந்தது. பின்பு காஸ்பல் ஹிம்சிலும் சாங்ஸ் அண்டு சோலோசிலும் வெளியிடப்பட்டது. வெகு விரைவில் உலகெங்கும் பரவி சீன உள்நாட்டு ஊழியங்களின் தலைவர் அறிவர் ஹட்சன் டெய்லர் அவர்களால் இது மிஷனெரிகளின் அபிமான பாடல் என்று அறிமுகப்படுத்தப்பட்டது.

1890–91ல் குளிர்காலங்களில் திரு ஸ்டெபின்ஸ் தம்பதிகள் இந்தியாவில் இருந்த சமயம், அலஹாபாத்துக்கு சென்றபோது எல்லென் லக்ஷ்மி கோரே செல்வியின் வீட்டிற்கு சென்று அவர் பெண்கள் மத்தியில் நற்செய்தி ஊழியங்களில் மிக ஈடுபாட்டுடன் இருப்பதையும் எளிமையும், இறைபக்தி நிரம்பியவராயும் அவளை அறிந்த அனைத்து பிரிவு. மிஷனெரிகளாலும் மிகவும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருப்பதை கண்டனர். இவ்வாறு கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் வந்த இருவரும் ஒரே ஆண்டவரின் அவரது ஏவுதலினால், ஊழியத்தில், அவரின் பிரசன்னத்தின் இரகசியத்தில் தங்கி இருக்க எத்தனித்திருந்தனர்.

சாங்கி பக்கம் 166–67

அவர் சன்னதியில் சஞ்சரிக்க
உள்ளம் ஏங்குதே, என் இயேசு தந்த
பாடம் மிக நல்ல பொக்கிஷம்,
உலகின் துன்பம். என்னை
ஒன்றும் செய்திடாதே,
சாத்தான் என்னை சோதித்திட்டால்
ரகசிய இடம் சென்று நானே
ஒளிந்து கொள்வேனே.

என் ஆன்மா தாகத்தால் நா வற்றி
சோர்ந்து சாய்கையில், அவர்
செட்டையின்கீழ் பானமுண்டு
ஊற்றுத்தண்ணீராம், என் மீட்பரும்
என்னோடிருப்பார் சம்பாஷிப்போமே,
அவர் சொல்லும் செய்தி என்னால்
மீண்டும் சொல்லலாகாது, அதை
சொல்லலாகாது.

தெரியும் அவர்க்கு என்தன் கஷ்டம்
மீண்டும் சொல்லுவேன், அதை
பொறுமையாய் கேட்பார்
மனச்சோர்வு நீக்கவே, அவர்
கடிந்து கொள்ளார் எந்தன் நண்பர்
என் பாவம் தெரிந்தும், அவர்
கோபம் கொள்ளார், என்னையவர்
கடிந்து கொள்ளார் பொறுமையாய்
அமைதி காப்பாரே.

என் ஆண்டவரின் ரகசியம்
உனக்கும் வேண்டுமோ?
அவர் நிழலில் நீ ஒளிந்துகொள்
இதுவே நற்பலன், நீ விலகி சென்றும்
அவர் சாயல் என்றும் சுமப்பாயே,
நீ மனதில் வைக்கும் அவர் சாயல்
முகத்தில் வைப்பாய் அவர் சாயல்
முகத்தில் வைப்பாயே.