நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன்.@கலாத்தியர் 6:14
portrait
ஜான் பௌரிங் (1792–1872)
© National Portrait Gallery

ஜான் பௌரிங், ஹிம்ஸ் (லண்டன் ரோலேன்ட் ஹண்டர் 1825) எண் 63 (In the Cross of Christ I Glo­ry). சௌ. ஜான் பாரதி (ஜனவரி 3, 2019),

ராத்பன், இத்தமார் கான்கே 1849 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

கிறிஸ்துவின் நல் சிலுவை மேன்மை,
காலம் சூழல் எல்லாம் மீறி.
உம் சரிதை தெளிவாய் தோன்றும்
காட்டும் உம் விந்தை வாழ்வு.

வாழ்வின் சாபம் சேர்ந்தே ஏக,
விஸ்வாசம் குன்றி பயம் தோன்ற,
என்னை என்றும் கைவிடாமலே காத்து
சாந்தமாக மின்னுமே.

இன்ப நேரம் இருளில்லாமல்,
அன்பின் ஒளி என் மேல் வீச,
மேலும் வீசி பிரகாசமாக அதோ
அன்பு சிலுவை ஒளியதே.

ஆசீர் நேரம் இன்ப துன்பம்,
தூய்மையாகுமே சிலுவையால்,
எல்லை இல்லா சமாதானம் ஈந்து
என்றும் இன்பம் தங்குமே.