ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.@எபிரெயர் 4:16
உருவப்படம்
ஆனீ செ. ஹாக்ஸ்
1835–1918

ஆனீ செ. ஹாக்ஸ்—குடும்ப ஆராதனைக்கு பாடல்களும் இராகங்களும் நியூயார்க் ஜேம்ஸ் ஆர். ஆஸ்குட், 1871, 829 ஆம் பக்கம் (I Need Thee Ev­ery Hour). ஹாக்ஸ் இப்பாடலை எழுதி முடித்ததும் தன் சபை போதகர் ராபர்ட் லோரி இடம் தர அவர் இசையமைத்து பல்லவியையும் சேர்த்தார்.

சௌ. ஜான் பாரதி (2018),

ராபர்ட் லோரி (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

நான் 37 வயதான ஒரு தாயும் மனைவியுமாக எனது அன்றாட கடமைகளினிடையே, திடீரென ஆண்டவரின் நெருக்கத்தை உணர்ந்து, துக்கத்திலோ மகிழ்ச்சியிலோ அவரின்றி நாம் வாழ்வது எப்படி என்பதை யோசித்து நீர் தேவை எந்நேரமும் எனும் வரிகள் என் மனதில் புகுந்து ஆட்கொண்டது…இப்பாடலிலுள்ள கருத்து கடவுள் மனஅமைதியின்போது எனக்குத்தந்தது, ஏன் அநேகரை தொட்டு அவர்கள் வாழ்க்கைக்கு பிரயோஜனமுமாய் ஆனது என்பதை எனக்கே ஏற்பட்ட ஒரு மனவேதனையின் காலங்களில்தான் உணர முடிந்தது.

ஆனீ ஹாக்ஸ்

நீர் வேண்டும் ஆண்டவா,
கிருபையின் கர்த்தரே,
உம் வார்த்தை தந்திடும்
மெய் சமாதானமே,

பல்லவி

நீர் வேண்டும் ஆம் நீர் வேண்டும்,
எல்லா வேளையுமே,
ஆசீர்வதியும் உம்மண்டை வந்தேன்.

நீர் வேண்டும் ஆண்டவா,
என்னோடே தங்குமே,
சோதனை அண்டுமோ?
நீர் என்னோடிருந்தால்,

பல்லவி

நீர் வேண்டும் ஆண்டவா,
சந்தோஷம் துக்கமோ,
இப்போதே வாருமே,
என் வாழ்வு வீணாமே,

பல்லவி

நீர் வேண்டும் ஆண்டவா,
உம் சித்தம் கற்பியும்
உம் வார்த்தை என்னிலே
நிறைவேற்றிடும்

பல்லவி

நீர் வேண்டும் ஆண்டவா,
நீர் தூயர் தூயரே,
உம் பிள்ளையாக்கிடும்
தேவகுமாரனே,

பல்லவி