தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள்; அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்.@சங்கீதம் 66:16
உருவப்படம்
வில்லியம் குஸ்டாவுஸ் பிஷ்சர்
1835–1912

அரபெல்லா கேத்தரின் ஹாங்கி, 1866. இப்பாடலின் வசனங்கள் கேத்தரினின் சொல்லப்படாத கதை எனும் 42 வரிகளுடைய செய்யுளிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது இவர் எழுதிய 50 வரிகளின் இரண்டாம் பாகமே பழைய பழைய கதை சொல். சௌ. ஜான் பாரதி (2018),

ஆனந்தப்பாடல்கள் எண்கள் 1 லிருந்து 3 வில்லியம் குஸ்டாவுஸ் பிஷ்சர் (பிலடெல்பியா பென்சில்வானியா மெத்தடிஸ்ட் எப்பிஸ்கோப்பல் புத்தக அறையிலிருந்து 1869) (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

என் இயேசு வாழ்ந்த வாழ்க்கையின்
நற்செய்தி சொல்லிடுவேன்,
அவர் மகிமை என்றும்,
அவர் வல்லமையையும்,
நான் சொல்லுவேன் அச்செய்தி,
என்றென்றும் அது சத்தியம்,
என் ஆன்ம வாஞ்சை இதே,
வேறொன்றும் செய்யேனே,

பல்லவி

இதை சொல்ல சொல்ல ஆசை,
என் மீட்பின் விந்தை செய்தி
என் இயேசுவின் நற்செய்தி
சொல்வேன் நான் மீண்டும் மீண்டுமே.

என் இயேசு வாழ்ந்த வாழ்க்கையின்
நற்செய்தி சொல்லிடுவேன்,
என் ஆன்ம கனா வாஞ்சை,
என் வாழ்விற்கது ஜீவன்,
நான் சொல்லுவேன் அச்செய்தி
என் வாழ்வில் அதன் தாக்கம்,
அதால் நான் என்றும் சொல்வேன்,
எங்கேயும் எல்லோர்க்கும்,

பல்லவி

என் இயேசு வாழ்ந்த வாழ்க்கையின்
நற்செய்தி சொல்லிடுவேன்,
நான் மீண்டும் மீண்டும் சொல்ல,
ஆ இன்ப இன்பமே, நற்செய்தி
இன்னும் சொல்வேன், இன்றும்
இவ்விந்தை செய்தி, கேளாதோர்காய்
நான் சொல்வேன், நல் இரட்சிப்பின் செய்தி,

பல்லவி

இந்நற்செய்தியை கேட்டோர்க்கும்
இதின்ப இன்பமே,
தம் ஆத்ம தாகம் தீர்க்கும்,
கேட்டோர்க்கும் மற்றோர்கும்,
மகிமையின் சமயம்,
புது பாடல் நானும் பாடுவேன்,
நான் நேசிக்கும் இச்செய்தி,
ஆ இன்ப இன்பமே,

பல்லவி