நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே.@யாக்கோபு 4:14
உருவப்படம்
ஜான் கிரீன்லீப் விட்டியர்
(1807–1892)

ஜான் கிரீன்லீப் விட்டியர், 1867 (I Know Not What the Fu­ture Hath). தமிழாக்கம் சௌ. ஜான்-பாரதி (மார்ச் 31, 2020),

இராகம் மேர்டியர்டம், ஹியூக் வில்சன், 1800 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

வருங்காலம் எவ்வாராகும்,
மா விந்தை புதிரோ?
ஒன்றே உண்மை, வாழ்வோ சாவோ?
ஆண்டவர் கிருபை நிச்சயம்.

என் ஆன்மா மாம்சம் பெலவீனம்,
காணா நோய் வியாதிக்கே,
நோவுன்ட நாணல் முறியாரே,
தேற்றியே காப்பாரே.

ஏதும் என் கைமேல் காண்கிலேன்,
விஸ்வாசம் நிரூபிக்க,
முற்றும் ஈவேன் தாம் தந்தது,
வேண்டுவேன் அன்பாய் அன்பை.

அமைதியாம் கடலண்டையில்,
நான் காத்து நிற்பேனே,
ஓர் தீங்கும் நேராதெனக்கே,
நீர் மேலோ கரையிலோ.

அறியேன் நான் தரை கரை,
மைதான மரங்களும்,
நன்றே அறிவேன் தொலைந்திடேன்,
தம் பாதுகாப்பை விட்டு.