அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.@யோவேல் 2:28
portrait
ஆன்டுரூ ரீட் (1787–1862)

ஆன்டுரூ ரீட், 1817 (Ho­ly Ghost, with Light Di­vine). சௌ. ஜான் பாரதி (ஜனவரி 24, 2019),

மெர்சி, லூயிஸ் மோரேயு கோட்சாக், 1867 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி (1960–)

தூய ஆவி என்மேல் வீசும்,
ஜோதி போலே என் உள்ளத்தில்,
நீக்கும் இருளின் சாபத்தை,
பகல்போல் நானும் பிரகாசிக்க.

தூய ஆவி மெய் வல்லமை,
தூய்மையாக்கும் என் நெஞ்சத்தை,
எந்தன் நெடுநாள் மீறுதல்,
ஆட்கொண்ட எந்தன் ஆன்மத்தை.

மீட்பர் முகம் நான் காண்பேனே,
அன்பின் அழகை பார்ப்பேனே,
மாட்சி மகிமை உண்மைகள்,
எனக்கும் காண காட்டிடும்.

தூய ஆவி மெய் இன்பமே,
வாரும் சோர்ந்த என் வாழ்விலே,
தீரும் என் துக்கம் வேதனை,
என்னுள்ளம் தேற்றி குணமாக்கும்.

தூய ஆவி தெய்வீகமே,
தங்கி என் உள்ளம் தேற்றுமே,
வீழ்த்தும் என் பாவ ஸ்வாபமே,
நீர் மாத்ரம் ஆளும் என்னையே.

தந்தேன் என்னை நான் உம்மிடம்,
நீர் என் மூலமாய் ஆளுமே,
நானும் தூயோனாய் வாழவே,
தந்தேன் நான் என்னையே உம்மிடம்.

ஆமேன்.