அல்லாமலும் அவர் பிரவேசித்த கிராமங்கள் பட்டணங்கள் நாடுகள் எவைகளோ, அவைகளின் சந்தைவெளிகளிலே வியாதிக்காரரை வைத்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்.@மாற்கு 6:56

தாமஸ் சுலீவன், 1898 (He Touched Me and Made Me Whole). சௌ. ஜான் பாரதி (மார்ச் 25, 2020),

தாமஸ் சுலீவன் (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

என் மீட்பரின் பாதத்தண்டை
அஞ்சி நான் வருந்தி நொந்த பாவியாய்,
கண்டு தயவாய் என்னை அழைத்தார்
மகிமைத்துதி கனமுண்டாம்.

தொட்டென்னையவர் தேற்றினார்,
இளைப்பாறும் என்தன் ஆன்மமே,
ஆ இன்ப நாள் என் பாவமெல்லாம்,
நீங்கிற்றே என்னை மாற்றினாரே.

நான் அறியேனே அவர் மேன்மையை
மீட்பர் என் மீது தம் அன்புமே,
என் மேல் என்தன் நேசரின் பரிவும்
நொந்திருந்த என்னைத்தேற்றியே,

என் கிருபையே போதுமே
அவர் தாம் சொன்ன வாக்கது
ஆம் வந்திடு, உன் பாவத்தை போக்கிட
என் வாழ்வை தந்து மரித்தேன் நீ வாழவே.

என் அன்பர் நீர் இயேசுவே
உம் நாமம் போற்றி என்னை மீட்டுக் காத்தீரே,
உம் புகழ் நான் பாடியே மீட்பர்
என் இராஜன் உம் கரம் காத்ததென்னை.