வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக. அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.@II தீமோத்தேயு 3:16–17
உருவப்படம்
ஐசக் வாட்ஸ்
(1674–1748)

ஐசக் வாட்ஸ், 1715 (Great God, with Won­der and with Praise). சௌ. ஜான் பாரதி (ஜனவரி 22, 2019),

கெய்த்நஸ், ஸ்காட்டிஷ் சால்டர் 1635 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

போற்றுதலோடு வியந்து
எம் விந்தை தேவனே,
உம் தயவு ஞானம் சக்தி
தெளிவாய் வேதத்தில்.

விண்ணில் சுழலும்
வான் மீன்கள் சொல் கேட்டு
நேர்த்தியாய், என் ஆன்மத்திற்கும்
தீபமே உம்மண்டை வந்தேக.

வயல்வெளி விளைச்சலே
எம் ஆகாரமாமே,
எம் வாழ்வில் யாம் தரும் கனி
உம் வார்த்தேயிலுண்டே.

இங்கே மெய் பொக்கிஷம்
யாவும் தேற்றுதலும் உண்டே,
எம் வாஞ்சை ஏக்கம்
இவ்விடமே நான் நம்பி வந்தேன்.

உம் வார்த்தை தெளிவாக்கிடும்
எம் குற்றம் உணர,
எம் மன்னிப்பு உம் வார்த்தையில்
நான் கண்டு ஏற்றிட.

நீர் எம்மை மீட்க மாண்டதை
இங்கே நான் கற்பேனே,
உம் மகிமையை கண்டிட
பூமியில் நூல் இல்லை.

நான் இன்னும் வேதம் வாசிக்க
இன்மன்னா புசிக்க
பகலில் வாசித்தே
இரவில் தியானித்தேகுவேன்.

ஆமேன்.