ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்@ஏசாயா 7:14

எமிலி ஆனி எலிசா ஷெரிப் (1814–1897) (Gra­cious Sav­ior, Who Didst Ho­nor). சௌ. ஜான் பாரதி, ஏப்ரல் 2020.

ஆல் செய்ன்ட்ஸ் ஓல்டு, டிராம்ஸ்டாட் ஜெசாங்புக், ஜெர்மனி (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

கனிவான கர்த்தரே நீர்
தாய்க்குலத்தை உயர்த்தினீர்,
நீரும் தாயின் பிள்ளையன்றோ,
தந்தையின் ஏக மைந்தனாம்,
பெண்மையை நீர் இன்றுமே,
அபிஷேகித்தருளும்.

இயேசுவே நீரும் மகன்தான்,
தாய்களுக்காசீர் தாரும்,
எங்கள் பிள்ளைகளை நாங்கள்,
உம் அண்டைக்கே நடத்த,
மகன் மகள்களுமே,
உமக்காய் அர்ப்பணிக்க.

நீரும் அன்று யோசேப்புடன்,
எளிமையாய் உழைத்தே,
யாமும் உம்மை பின்பற்றியே,
பொறுமை யாய்த்துன்பத்திலும்,
எங்கள் இல்ல வாழ்விலும்,
உம்மில் வாழ செய்திடும்.

துக்கத்தோடே நீர் நடந்து,
எம்மை மீட்க சகித்து,
எம்மை நீர் உம் அண்டை சேரும்,
வெறுத்தே யாம் தள்ளினும்,
எளிமையாம் எம் வாழ்வு,
உம் கீர்த்திக்காய் ஏற்றிடும்.