அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள்.@லூக்கா 2:8–9
உருவப்படம்
ஜான் வெஸ்லி ஒர்க்
(1873–1925)

ஜான் வெஸ்லி ஒர்க், அவர்களின், அமெரிக்க நீக்ரோ பாடல்களிலிருந்து (நாஷ்வெல்லி, டென்னசே 1907) (Go, Tell It on the Moun­tain). சௌ. ஜான் பாரதி (2018),

அமெரிக்க நீக்ரோ—ஆன்மீக பாடல்கள் (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

பல்லவி

போய், மலைகள் மீது சொல்லு,
வயல்வெளி பள்ளதாக்கு,
போ, அங்கும் இங்கும் சென்று,
நம் மீட்ப்பர் பிறந்தார்.

அம்மேய்ப்பர் மந்தை காக்க,
இரா குளிர் வேளையில்,
அதோ பார் வானில் ஜோதி,
பிரகாசமாகவே,

பல்லவி

வான் ஒளி தோன்ற மேய்ப்பர்,
பயந்து நடுங்கி,
நம் மீட்ப்பர் பிறந்த செய்தி,
எங்கும் பறைசாற்ற,

பல்லவி

ஏழைக்கோலமாக,
மாடடைக்குடிலில்,
நம்மை மீட்க்க இங்கே,
வந்து பிறந்தாரே,

பல்லவி