இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.@மத்தேயு 28:20
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

எரேமியா ஏமஸ் ரான்கின், தொகுப்பு ரான்கின், ஜான் பிச்சாப் மற்றும் ஓட்டிஸ் பிரெஸ்பெரி சிக்காகோ இல்லிநாய்ஸ், மெற்கத்திய ஓய்வு நாள் பள்ளி வெளியீட்டார், 1880 (God Be with You Till We Meet Again). சௌ. ஜான் பாரதி, ஜீலை 26, 2019.

காட் பி வித்யு, வில்லியம் கௌள்ட் டோமர் (1837–1896). இச்சமயம் இவர் மெத்தடிஸ்ட் எபிஸ்கோப்பல் திருச்சபையில் வாஷிங்டனில் இசை இயக்குனராக இருந்தார் (🔊 pdf nwc).

portrait
எரேமியா ஏமஸ் ரான்கின்
(1828–1904)

மீண்டும் நாம் சந்திக்கும் நாள் வரை,
ஆண்டவரின் கிருபை நல்க,
தம் மந்தையிலுன்னை சேர்த்து,
ஆண்டவர்தாம் உன்னை காக்கட்டும்,

பல்லவி

மீண்டும் சந்திக்கும் நாள் வரை,
மீண்டும் சந்திக்கும் நாள் வரையில்,
மீண்டும் சந்திக்கும் நாள் வரை,
ஆண்டவர்தாம் உன்னை காக்கட்டும். ஆமேன்.

மீண்டும் நாம் காணும் நாள் வரை,
தம் செட்டையின் கீழ் காக்க,
அன்றன்றுக்காம் மன்னா ஈந்து,
ஆண்டவர்தாம் உன்னை காக்கட்டும்,

பல்லவி

மீண்டும் நாம் சந்திக்கும் நாள் வரை,
வாழ்வின் போராட்டத்தினூடே,
உன்னை அன்பாய் பற்றி கொண்டு,
ஆண்டவர்தாம் உன்னை காக்கட்டும்,

பல்லவி

மீண்டும் நாம் சந்தக்கும் நாள் வரை,
அன்பின் ஆற்றல் உன்னை சூழ்ந்து,
சாவின் சாபம் முற்றும் நீக்கி,
ஆண்டவர்தாம் உன்னை காக்கட்டும்,

பல்லவி