மனுஷகுமாரன் போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள்.@லூக்கா 7:34
portrait
நியூமேன் ஹால் (1816–1902)

கிறிஸ்டோபர் நியூமேன் ஹால் (1816–1902) (Friend of Sin­ners, Lord of Glo­ry); சௌ. ஜான் பாரதி (பிப்ரவரி 1, 2019), .

கார்ல்டன், ஜோசப் பார்ண்பை, 1869 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி (1960–)

இப்பாடல் வரிகள் ஹால் தன் தந்தை ஜான் வைன் ஹால்க்காக எழுதியது, அவர் பாவிகள் நேசன் எனும் கைப்பிரதியின் ஆசிரியராவார். அது பாஸ்டன் ஆபி செப்டம்பர் 1857, முதல் முதலாக ஹால் அவர்களின் போல்டன் ஆபி மற்ற கவிதைள், லண்டன் 1858, நட்டர்: பக்கம் 72ல் இது வெளியானது.

பாவிகளின் நண்பனுமாம்
மகிமையின்ராஜனாம்,
தாழ்மை வேந்தன் சகோதரன்
நம் மீட்பரும் அவர்தாம்,
உந்தன் வாழ்வின் விந்தை பாடி,
நண்பர் மீட்பர் நீர்தாமே,
வல்லமையும் தாழ்மை நீரே,
உம் கிருபைக்காய் போற்றுவோம்.

என்றும் கைவிடாத நண்பர்,
உண்மை மேன்மை தயவும்,
எப்பொழுதும் ஏற்றுக்கொண்டு
தொலைந்தோரை தேடியே,
துக்கம் தீர்த்தானந்திக்கவே,
வாழும் மட்டும் அன்போடே,
சமாதானம் ஈந்து காக்கும்
விண்ணில் வாழும் நண்பன் நீர்.

நேசித்துந்தன் சேவை செய்ய
எல்லா தீங்கும் நீங்கிடும்,
பாவ கட்டெல்லாம் முறித்து
சிந்தை உமதாக்கிடும்,
உம் வருகை நோக்கி காத்து
என்றும் உம்மை காணவே,
பயமும் சந்தேகம் இன்றி
காண்போமே நாம் நேசரை.