எங்களுக்கு அல்ல, கர்த்தாவே, எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும், உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும்.@சங்கீதம் 115:1
உருவப்படம்
யோஹேன் ஷெப்லர்
1624–1677

ஹென்றி டவுண்டன், 1841 (For Thy Mer­cy and Thy Grace); சௌ. ஜான் பாரதி, ஜனவரி 14, 2018.

கல்பாக், யோஹேன் ஷெப்லர், ஹிலிஜ் சீலன்லஸ்ட், 1657 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

உம் தயவு கிருபையால்
மற்றோர் ஆண்டும் வந்ததே,
தந்தோம் கேளும் மீட்பரே
எங்கள் துதி நன்றியை.

எங்கள் பாவம் யாவுமே,
வைத்தோம் உந்தன் பாதமே,
சென்ற தோல்வி மறந்தே
எதிர் கொள்வோம் வெற்றியே.

எதிர்காலம் இருளோ?
வீசும் உந்தன் ஒளியே,
பெலனில்லை போராட
உந்தன் கிருபையால் தாங்கும்.

சோதனை பெலவீனம்,
பூரண பெலன் தாரும்,
திக்கற்று அலைகையில்
நீரே மெய் நல் வழியாம்.

இவ்வாண்டே என் முடிவோ?
என்றெண்ணுவோர் பாருமே,
உம் கோல் தடி தேற்றுமே
ஆற்றும் அங்கலாய்ப்பினை.

தூய்மை விசுவாசமாய்,
என்றும் உந்தன் பிள்ளையாய்,
ஏற்பீர் காப்பீர் நடத்தி
ஜீவ கிரீடம் பெறவே.

உமதாட்சி கோட்டையில்
தங்க யாழ் இசைக்க யாம்,
உம்மாலே தான் ஆகுமே
இராஜ இராஜன் கர்த்தாவே.