இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.@மத்தேயு 28:20
portrait
எலிசா எட்மண்ட் ஹிவிட்
(1851–1920)

எலிசா எட்மண்ட் ஹிவிட், 1898 (Fear Not, I Am with Thee). சௌ. ஜான் பாரதி (மே 26, 2019),

ஜே. சி. ஹெச். மற்றும் வி. ஏ. ஒயிட் 1896 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

அஞ்சாதே நான் உன்னோடு ஆசீர் ஒளியிதோ,
மா மகிமைப்பிரகாசம், காட்டுதென்வழி,
மேக இருளினூடே, வாக்களிக்கும் ஒளி,
என்றும் கைவிடாதுன்னை தனியனாகவே,

பல்லவி

தனியனல்லேன் நான் தனியனல்லவே,
நான் காப்பேன் என்றவர் காப்பார்,
என்றும் கைவிடாரே, என்றும் கைவிடாரே.

வாடும் மலர்கள் சூழ காய்ந்துதிரும் புஷ்பம்,
பூவின் சூரியன் மங்கும், வான் பிரகாசிக்கும்,
சாரோனின் ரோஜா, தானாய் பிரகாசிக்கும்,
இயேசு விண்ணின் பிரகாசம் என்னை விட்டகலாரே,

பல்லவி

முன்னே அறியா பாதை அருகில் அபாயமே,
என் மீட்பர் எந்தன் சமீபம், ஆற்றி தேற்றுவார்,
ஆனந்த பறவைக்கூட்டம், என்னுள்ளில் துள்ளுதே,
இனிமையாக பாடும் என்னைக்கைவிடாறென்று.

பல்லவி