அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.@உபாகமம் 33:27

ஜேம்ஸ் மெர்ரிக், 1763 (Eter­nal God, We Look to Thee). சௌ. ஜான் பாரதி (ஏப்ரல் 18, 2020),

இராகம் தூய ஆக்னஸ், ஜான் பாக்கஸ் டைக்ஸ்,1866 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

.நித்யப்பிதாவே உம்மையே,
நோக்கி யாம் வந்தோமே,
உம் கண்கள் காணும் எம் தேவை,
உம் கரம் ஈயுமே,

பயமும் பக்தியும் எம் நெஞ்சில்,
உம் அன்பு நடத்தவே,
வீண் மாயை யாவும் நீக்கியே,
எம் பயம் போக்குமே.

எம் ஆசையல்ல தேவையே,
உம் கிருபை தந்திடும்,
தயவாய் தெளிவாய் தாருமே,
தீமையன்றி நன்மை.     ஆமேன்.