இதோ, ஒரு ராஜா நீதியாக அராசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள்.@ஏசாயா 32:1
portrait
ரே பால்மர் (1808–1887)

ரே பால்மர், 1860 (Eter­nal Fa­ther, Thou Hast Said). சௌ. ஜான் பாரதி (ஜனவரி 23, 2019),

சர்ச் டிரயம்பேன்ட், ஜேம்ஸ் வில்லியம் எலியாட், 1874 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி (1960–)

அனாதி தேவா உம் வாக்கு
கிறிஸ்தேசுவுக்கே மகிமை,
தம் இரத்தம் சிந்தி மீட்டாரே,
இன்றென்றும் ஆள்வார் இராஜனாய்.

உம் செங்கோல் ஆள வேண்டியே
காத்து நின்றோம் யாம் மீட்பரே,
எங்கும் வெற்றியின் காட்சியே,
காலம் கடந்து சென்றதே.

எதிராய் சாத்தான் கூட்டமே
சிலுவை பார் ஆம் போர் ஓசை,
இருளின் தூண்கள் நெருங்க,
கால் தவறியே மாள்வாரே.

மலைகள் மீதே ஒளிர்ந்து
நல் பாதை காட்டி நடத்தும்,
எதிரொலிக்கும் குரல்கள்,
ஆனந்த சப்தம் கேட்குதே.

விஸ்வாசம் சபை நிறப்பும்
வல்மையால் கண்ணீர் ஓய்ந்திட,
தேசங்கள் யாவும் விறைந்தே,
அமைதி விடுதலைக்காய்.

தூயாவி வந்தே காண்பியும்
தந்தையின் சித்தம் வல்லமை,
நரகை வையம் வென்றிட,
இறுதியாய் கொண்டாடிட.