முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.@மத்தேயு 24:13
portrait
பிரான்சிஸ் கிராஸ்பி
(1820–1915)

பிரான்சிஸ் ஜேன் கிராஸ்பி, 1890 (En­dure to the End). சௌ. ஜான் பாரதி (ஏப்ரல் 15, 2020),

அறிவர் ஜான் ராப்சன் ஸ்வெனே (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

வீணாய் கைகள் கட்டி நின்றே,
விண்வீட்டின் ஏக்கமா?
நாமும் வெற்றி பெற்றோம் என்றே
போர் முன் கூறலாகுமோ?

முடிவுவரை நிலைப்போரே பாக்யராம்
எல்லாம் நலமே,
ஜீவவிருட்சத்தின் கனியை புசித்தே
இயேசுவோடென்றும் வாழுவார்.

பரிசு நிச்சயம் அல்லவே,
நாம் ஓடினாலன்றி,
நித்யானந்த்தின் கனியும் பெற
ஓடினாலன்றி,

நம் நிலையில் நாம் தூங்காமல்,
பாதுகாப்பு இன்றியே,
சிலுவை சுமப்போர் மட்டுமே
ஆம் கிரீடம் பெறுவார்,

சிலுவை ஒன்றே நம் மேன்மையாம்,
கிறிஸ்துவே நம் பாடலே,
அவர் நீதி வஸ்த்திரம் சேர்ந்து நாம்
மீட்கப்பட்டோரோடு,