1. பின்பு மோசே மோவாபின் சமனான வெளிகளிலிருந்து எரிகோவுக்கு எதிரான நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறினான்; அப்பொழுது கர்த்தர் அவனுக்கு, தாண்மட்டுமுள்ள கீலேயாத் தேசம் அனைத்தையும், 2. நப்தலி தேசம் அனைத்தையும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் தேசத்தையும், கடைசிச் சமுத்திரம்வரைக்குமுள்ள யூதா தேசம் அனைத்தையும், 3. தென்புறத்தையும், சோவார்வரைக்குமுள்ள பேரீச்சமரங்களின் பட்டணம் என்னும் ஊர்முதற்கொண்டு எரிகோவின் பள்ளத்தாக்காகிய சமனான பூமியையும் காண்பித்தார். 4. அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: நான் உங்கள் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்ட தேசம் இதுதான், இதை உன் கண் காணும்படி செய்தேன்; ஆனாலும் அவ்விடத்திற்குக் கடந்துபோவதில்லை என்றார். 5. அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மரித்தான்.@உபாகமம் 34
உருவப்படம்
ஐசக் வாட்ஸ்
1674–1748

ஐசக் வாட்ஸ், 1707–09 (Death Can­not Make Our Souls Afraid). சௌ. ஜான் பாரதி (ஏப்ரல் 28, 2020),

இராகம் தூய ஆக்னஸ், ஜான் பாக்கஸ் டைக்ஸ், 1866 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

மரணம் கண்டு அஞ்சோமே,
ஆண்டவர் எம்முடன்,
ஆழ்ந்த இருள் சூழ்ந்திடினும்,
அச்சத்திற்கிடம் கொடோம்.

என் ஆஸ்தி யாவும் வீணென்றே,
அவர் தம் சொல் கேட்டே,
ஓடியே சேர்வேன் அழைத்திட்டால்,
மோசேபோல் நானுமே.

பைசாகின் மேலே சென்றே நான்,
கானானைக்காணவே,
ஏதும் என்னை ஈர்க்காதே,
என் சாவு திவ்யமே.

என் தந்தை மார்பில் நானுமே,
மூச்சை நான் மறந்தேன்,
கேளிக்கை வாழ்வை தீர்த்தேனே,
மா தூய மரணத்தால்.ஆமேன்