நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.@ஏசாயா 9:6

ஜானுஸ் விக்டர் (1888–1954). ஹங்கேரியனிலிருந்து ஆங்கிலத்தில் ஜான் அசாரி. சௌ. ஜான் பாரதி (ஜூலை 24, 2019),

யுனேப் அ பொல்டன் யுனேப் அ மென்னிபென் (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

ஆனந்தமே ஆம் நாமெல்லோரும்,
விண்ணோர் மண்ணோரும் ஆர்ப்பரிக்க,
வான் தூதர் தோன்றி பாடியே போற்ற
விஸ்வாசம் அன்பும் நம் வாழ்விற்கே,
வந்தேகி ஈந்திட்டார் நம் வாழ்விற்கே.

பிரகாசமாக நட்சத்ரம் மின்ன,
நம் உள்ளம் காணும் தெய்வீகமே,
தேவ நற்செய்தி தந்திடும் வாக்கு
நாமும் இச்செய்தி எங்கும் சொல்வோம்,
நாம் இந்த செய்தியை எங்கும் சொல்வோம்.

திக்கற்றோர் போற்றி துன்புற்றோர் வாழ்த்தி,
விண் வீட்டை நோக்கி நம்பிக்கையாய்,
நமக்காய் அன்பாய் நம் இயேசு நாதர்
வந்திங்கே தம்மை தந்திட்டாரே,
நம் இயேசு தம்மையே தந்திட்டாரே.

பூவினில் சாந்தம் மாந்தர் மேலன்பு,
என்றும் மகிழ்ச்சி ஆனந்தமே,
நல் கிறிஸ்மஸ் காலம் மண்ணும் விண்ணும்
மகிழ மாந்தர் மேல் பிரியம்,
பூமியில் என்றும் சமாதானமே.