ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும்; விசுவாசிக்கிறவன் பதறான்.@ஏசாயா 28:16
உருவப்படம்
ரால்ப் வார்ட்லா
(1779–1853)

ரால்ப் வார்ட்லா, 1817 (Christ, of All My Hopes the Ground). சௌ. ஜான் பாரதி (ஏப்ரல் 20, 2020),

ஹென்டன், ஹென்றி ஆபிரகாம் மலன், 1827. சேர்ந்திசை: லோவெல் மேசன், 1838 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

கிறிஸ்துவின்மேல் விசுவாசம்,
என் ஆனந்த ஊற்றுமே,
என்றும் நான் நிலைத்திட,
அவர்க்காய் செயல்பட.

என் இதயம் ஒளிர,
அஞ்சாமல் அவர் அன்பால்,
போற்றி நான் புகழ்ந்தென்றும்,
மகிழ்ந்தே களிப்புடன்.

துன்ப மேகம் சூழ்ந்தாலும்,
வீசும் காற்று புயலாய்,
உந்தன் கிருபை காக்கட்டும்,
இன்பமாய் இருள்நீக்கி.

உன்தன் நாம மகிமை,
விண்ணின் பாடலாய்த்தோன்ற,
எந்தன் உள்ளே பிழம்பாய்,
திண்ணமாக அன்புடன்.

வாழ்வின் இன்பம் உம் நாமம்,
நற்செய்தியாய் பறந்தே,
எங்கும் செல்ல காண்பதே,
பாக்யம் இருள் அகல.

ஜீவ ஊற்றாம் கிருபையே,
நீர் அருளும் பாக்யமே,
என் வாழ்வு முற்றும் வரை,
உமக்காய் நான் வாழ்வேனே.

துன்ப வியாதி அண்டி நான்,
ஆழ்ந்தே செல்ல பூமியில்,
துக்கத்தால் திடீரென்று,
சாக மிக பயந்தும்.

எந்தன் மீட்பரே அப்போ,
கிட்டி நின்று தயவாய்,
இன் முகம் கொண்டெனைத்தாங்கி,
ஆற்றி தேற்றி பயம் நீக்கி.

உம் இரத்தம் என் நம்பிக்கை,
ஏதும் என்னை தீண்டாதே,
பத்ரமாய் நான் கரை சேர்வேன்,
மானுவேலின் ஸ்தலம்தான்.

நானும் கரை கண்டதும்,
பின்னே தள்ளி மூடுமே,
மரணத்தின் இருள் என்னை,
பிரிக்காது என்றென்றும்.

இவ்வாறே நீர் தாருமே,
மேகமில்லா வானத்தில்,
கிறிஸ்துவுடன் வாழவே,
சாவெனக்காதாயமே.