நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை; தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும்.@பிரசங்கி 12:1
portrait
ஐசக் வாட்ஸ்
1674–1748

ஐசக் வாட்ஸ் (1674–1748) (Children, to Your Creator, God). சௌ. ஜான் பாரதி (மே 16, 2022),

இராகம் தூய ஆக்னஸ், ஜான் பா. டைக்ஸ், 1866 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

பிள்ளைகளே கனம் தந்து,
உங்களைப்படைத்தோரை,
இவ்விளவயதிலே இன்றே,
சோதனை தோன்றுமுன்.

ஞானமாய் நீயும் அண்டிடு,
துக்கிக்கும் நாள் முன்னே,
வாலிப இன்பம் கடந்து,
வலிமை போகுமுன்.

நாவிற்கினிய பந்திகள்,
இல்லாமல் போகுமே,
செவியும் யாவும் மறந்தே,
இன்பாடலின்பமும்.

உன் வாழ்வின் தங்க காலமே,
வயோதிபம் கொல்லும்,
உபாதை சோர்வு வேதனை,
மரணம் நெருங்குமே.

உன் கண்களில் இருள் சூழ்ந்தே,
யாவும் மறைந்திட,
உன்னை தேற்றிட யாதுமின்றி,
விண்ணின் பேரொளியுமே.

ஆண்டவர் கண்கள் காண்பாயோ?
முன் நிற்கக்கூடுமோ?
மரணம் உன்னை அண்டியே,
சேர்ந்தே அணைத்திட.

வெள்ளி இழைகள் உதிர்ந்திட,
உன் தேகம் வீழ்ந்திட,
சென்றே கலந்தே மண்ணுடன்,
தன் சொந்த இடத்திலே.

மா சுமை பாரம் சுமந்திட்டே,
அசுத்தமாகவே,
ஆண்டவர் கோபத்தண்டையில்,
மோட்சம் அண்டாமலே.

உன் பலவீன கைகளால்,
நீ என்ன செய்வாயோ?
மரண ஓலம் கேட்குமே,
உன்னையே கொண்டோட.

ஆண்டவர் நாம சிந்தையே,
தேவை எந்நேரமும்,
அதை விட்டோடி செல்லாமல்
நேசித்தே வாழ்ந்திடு. ஆமேன்