
யோஹான் வில்ஹெல்ம் ஹெ, 1837 (Weißt du, wie viel Sternlein stehen?). ஜெர்மன் மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டது ஜான் வில்லியம் டல்கென் (Can You Count the Stars?). சௌ. ஜான் பாரதி (நவம்பர் 14, 2021),

எண்ணக்கூடுமோ நீ, விண்ணில்
மின்னும் விண்மீன் கூட்டத்தை?
எண்ணுவாயோ? கீழே தவழும்
மேகக்கூட்டத்தையும் நீ?
யாவும் எண்ணி இலக்கமிட்டார்,
கண்மூடா நம் ஆண்டவர்,
இவை யாவும், யாவற்றையும்,
ஒவ்வொன்றாகவே படைத்தார்.
எண்ணக்கூடுமோ நீ ஜொலிக்கும்,
வண்ண சிறகு கூட்டம்,
எண்ணுவாயோ? சில்லென்றிருக்கும்
நீரோடை மீன்களை நீ,
யாவையுமே, பெயர் சொல்லியே,
படைப்பிற்கெல்லாம்,நம் ஆண்டவர்,
இவையாவும் யாவற்றையும்,
ஒவ்வொன்றாகவே படைத்தார்.
எண்ணக்கூடுமோ நீ சிறாரை
தினம் எழுந்து பாடியே,
காலைதோரும் ஆனந்தமாக,
கேட்பாரே தாம் தொனியை,
பாடிடும் குரல் கேட்பார்,
எல்லோரையும் நேசித்தே,
அன்பாகவே யாவரையும்
அனைவரையும் நேசித்தே.