இந்தத் தேகத்தில் குடியிருக்கையில் கர்த்தரிடத்தில் குடியிராதவர்களாயிருக்கிறோமென்று அறிந்தும், எப்பொழுதும் தைரியமாயிருக்கிறோம்.@II கொரிந்தியர் 5:7
உருவப்படம்
ஜான் நீயூட்டன்
(1725–1807)

ஜான் நீயூட்டன், ஓல்னே ஹிம்ஸ் லண்டன், வா ஆலிவர், 1779 (By Faith in Christ I Walk with God). சௌ. ஜான் பாரதி (ஏப்ரல் 4, 2020),

இராகம் அரிசோனா, ராபர்ட் ஹென்றி எர்ன்ஷா, 1918 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

கிறிஸ்துவின் மேல் விஸ்வாசத்தால்,
விண்வீடு தோன்ற நடந்து,
அவர் கோல் தடியும் நடத்த,
இனிமையான பாதையில்.

பாலைவனமே ஆயினும்,
திக்கற்று நான் சுற்றினாலும்,
திட்டமாய் என்னை கைவிடார்,
என் வழியை தப்பவிடார்.

ஆபத்தான கண்ணி வழி,
வழி தப்பேன் நான் எவ்வாரேனும்,
விஸ்வாசத்தாலே ஜெயம் கொள்வேன்
வல்லக்கரம் நடத்தவே.

காடு வனாந்திரமாயினும்,
போஷித்தே என்னை நடத்துவார்,
தேவையாவும் சந்தித்தே என்னை,
திருப்தியுடன் நடத்துவார்.

இன்ப சம்பாஷணை செய்தே,
முற்றிலும் வேதனையின்றி செல்ல.
எந்தன் பாரம் துன்பங்களும்,
சொல்லிடுவேன் அன்பாய் கேட்ப்பார்.

அவர் வார்த்தை என்னைத்தேற்றும்,
எந்தன் ஆன்மா சோர்ந்த நேரம்,
தெளிந்தே நான் நல் கீதம் பாட,
சோர்ந்து சாய என்னைக்காப்பார்.

உலகின் மாயா ஜாலமே,
சட்டென்றவை விட்டோடுமே,
உம்முடன் நான் நடப்பேனே,
காவலன் எந்தன் நண்பன் நீர்.