கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.@ஏசாயா 35:10
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி (1960–)

மேரி பாச்செல்டர், 1868 (Bury Thy Sorrow). சௌ. ஜான் பாரதி (2018),

லக்சம்பர்க், பிலிப்பு பவுல் பிலிஸ் (1838–1876) (🔊 pdf nwc).

உருவப்படம்
பிலிப்பு பவுல் பிலிஸ் (1838–1876)

இவ்வுலகில் பொதுவாக யாரும் நம் மனக்கவலைகள், பாரங்களை பற்றி கேட்க விரும்புவதில்லை. சிலமாதங்களாக The Cyber Hymnal™ ல் உள்ள People வரிசையிலுள்ளவர்களை பற்றி தகவல்களையும் மேலும் சிலரது கல்லறையையும் கண்டு அதிலுள்ள செய்திகளையும் படிப்பதை நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்வது வழக்கம். ஒரு சமயம் நான் செய்துவரும் Hymnal Compiling வேலையின்போது கண்டெடுத்ததுதான் இந்த பாடல் அதன் குறிப்பில் திரு சான்கி அவர்கள் எழுதியிருந்த அதன் பின்னணி என் நெஞ்சத்தை கவர்ந்திடவே இப்படியும் ஓரு பாடல் உண்டோ என வியந்து இதை கண்டிப்பாக மொழிபெயர்பேனென்று என்மனைவியிடம் வாக்களித்து சிறிது சிறிதாய் இரண்டு நாட்களில் பேருந்து பிரயாணங்களிலேயே கடவுள் கிருபையால் எழுதிமுடித்தேன்.

சௌ. ஜான் பாரதி, 2018

சென்றுன்துக்கம் புதைத்திடு,
உலகின் பங்கும் உண்டு,
யாரும் காணாது ஆழியில்,
சிந்தித்திடமைதியாய்,
இயேசுவிடம் சொல்லிடு நீ
இருளின் மறைவிலே,
இயேசுவிடம் சொல்லிடு நீ
எல்லாம் சரியாகும்.

இயேசுவிடம் சொல்லிடு நீ,
உன் துக்கம் அறிவாரே,
இயேசுவிடம் சொல்லிடு நீ,
உன் துக்கம் தீர்ப்பாரே,
அவர் தரும் ஒளியது,
உனக்கு வழிகாட்டும்,
உன் பாரம் சுமப்பாரே,
நன்று ஜெபித்திடு.

உன் வேதனைபோலவே,
மேலும் பலர்க்குண்டு,
திக்கற்றோர்க்கு ஆறுதல்
சொல்லிடு இனிமையாய்,
உன் துக்கத்தை புதைத்திடு
மற்றோர்க்கு ஆசி கூறு,
நீ பிறர்க்கு ஒளிதந்து,
இயேசுவிடம் சொல்லிடு.