
பேனி கிராஸ்பி, 1873 (Blessed Assurance): எனது தோழி திருமதி. ஜோசப் கினாப், ஒரு ராகத்தை ஓரிருமுறை என்னிடம் இசைத்துக்காண்பித்து இது என்ன சொல்கிறது என கேட்க நான்,
திண்ணமாம் ஆசீர், இயேசென் நேசர்
என்று பதிலளித்தேன்.
இப்பாடல் அக்கேடமி விருது பெற்ற, இதயத்தில் இடங்கள் (1984) மற்றும் டிரிப்டு பவுண்டிபுல் (1985) எனும் திரைப்படத்திலும் பாடப்பட்டது. மேலும் பேனி அவர்களின் மிக பிரபலமான பாடல்களுள் ஒன்றாக கருதப்படுகிறது, 850 க்கும் மேலான புத்தகங்களில் வெளிவந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
சௌ. ஜான் பாரதி (2018),
அஸ்ஷீரன்ஸ், திருமதி. ஜோசப் கினாப் (🔊 pdf nwc).

1900 ஆம் ஆண்டின் போர் காலத்தில் படை வீரர்கள் குழுக்களாக ஒருவரையொருவர் கடந்து செல்லும் பொழுது அவர்களுக்கு அறிமுகமானவர்களை கடந்து செல்லும் தருணத்தில் 494 என்று அவர்களிடம் சொல்ல அவர்கள் மேலும் ஆறு என பதிலளித்து செல்வார்கள், இதன் முக்கியத்துவம் யாதெனில் 494 என்பது
சாங்ஸ் அன்டு சோலோஸ்புத்தகத்தில் மீண்டும் சந்திககும்வரை கடவுள் உங்களோடு இருப்பாராக என்பதாம், மேலும் 6 என்பது 500 ஆம் பாடலாகியதிண்ணமாம் ஆசீர் இயேசென் நேசர்என்பதை குறிக்கும் என்பதாம்.சாங்கி பக்கம் 122.
திண்ணமாம் ஆசீர் இயேசென் நேசர்
மகிமை வாழ்வின் நல் சுவையன்றோ?
ஸ்வீகாரம் நானே, இரட்சிப்பினால்,
அவராவியால் தம் இரத்தத்தால்,
பல்லவி
இதுவென்வாழ்வு இதென் பாடல்,
போற்றியே பாடி முழு நாளும்,
இதுவென் வாழ்வு இதென் பாடல்,
இரட்சகரை நான் போற்றிடுவேன்
அர்ப்பணித்தேனே, மகிழ்ச்சியே,
ஆனந்த காட்சி, கண்டேனிப்போ,
வானிலிருந்து தூதர் தோன்ற,
கிருபை தொனிதான் அன்பினோசை,
அமைதியான அர்ப்பணிப்பு,
என் மீட்பராலே, ஆசீர் பெற்றேன்,
விழித்திருந்தே, காத்திருந்தே,
அவர் அன்பாலே, நன்மை பெற்றேன்.