உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன்.@எண்ணாகமம் 12:6
உருவப்படம்
டொனால்ட் பி.ஹெஸ்டாட்
1918–2013

8 ஆம் நூற்றாண்டு பாடல், ஆங்கிலத்தில்; மேரி எலிசபெத் பிர்நே, 1905. எலினார் ஹல் 1912 (Be Thou My Vi­sion). சௌ. ஜான் பாரதி (2018),

ஸ்லேன், ஐரிஷ் ராகம், இப்பாடலுக்கேற்ப ஒழுங்கு படுத்தியவர்: டொனால்ட் பி.ஹெஸ்டாட், 1974 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

தென்னிந்திய திருச்சபையின் தலைமைச்செயலகமான இந்த அலுவலகத்தில் நான் வந்து சேர்ந்த 2002’ஆம் ஆண்டின் ஜீலை மாதத்தின் முதலாம் நாள் திருவிருந்து ஆராதனையில் இசைக்கும்படி அன்று ஆராதனை நடத்த வந்தவர் இந்த பாடலை தெரிவு செய்ததால் நான் ஆர்கனில் அன்று வாசிக்கும் போது, இதேபாடலை தைவானீஸ் மொழியில் நான் அங்கிருந்த சமயம் பாடியிருப்பது நினைவுக்கு வந்தது, அப்போது முதல் தமிழில் மொழிபெயர்ப்பு இருக்குமோ என்று ஆங்கிலத்தில் பாடும்பொழுதெல்லாம் யோசிப்பதுண்டு, இதுவரை காணாததினாலும் ஆண்டவரின் கிருபையால் அவர் மகிமைக்காக சைபர் ஹிம்னல் தந்த ஊக்கத்தாலும் மொழிபெயர்த்தேன். இந்த ராகம் எனக்கு பிடித்த ராகங்களுள் ஒன்று என்பதை கூறவேண்டிய அவசியமில்லை.

சௌ. ஜான் பாரதி, 2018

என் தரிசனம் நீர்
ஆண்டவரே,
நீர் எல்லாம் எனக்கு
நான் ஒன்றுமில்லை,
உம் வசனம் எனக்கு
நல்ல துணை, நான்
நிற்கையிலுமே
என் உறக்கத்திலும்.

என் புத்தி என் ஞானம்
நீர் மெய் வசனம்,
நீர் என்றும் என்னோடு
நான் உம்முடனே,
நீர் என் தந்தை நான்
உந்தன் பிள்ளையாமே,
நீர் என்றும் என்னோடு
நான் உம்முடனே.

என் நெஞ்சின் கேடயம்
போர் வாளும் நீர்,
தற்காப்புக்கு நீர்
எந்தன் சக்தியாவீர்,
என் ஆத்துமத்திற்கு
நல் கோட்டையுமே,
நீர் என்னை தூக்கி
உம் விண்ணில் சேருமே,

செல்வ சம்பத்தும்
போற்றுதலும் வீண்,நீர்
தாம் எந்தன் பொக்கிஷம்
எல்லாமுமே, எந்தன்
நெஞ்சில் நீர் தாம் நீர்
மட்டுமேயாம், நீர்
ராஜாதி ராஜனாம்
என் எல்லாமே,

மேலோக ராஜனாம்
விண்ணின்சூர்யன்,
அவ்வானந்தம் வெற்றியும்
எனதாக்கும், என்
நெஞ்சின் நெஞ்சமே
நான் வீழ்ந்திடினும், நீர்
எந்தன் தரிசனமாயிருமே.