பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக்காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்.@லூக்கா 2:12
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி (1960–)

1 & 2 சரணங்கள் அனாமதேய. பள்ளிகள் குடும்பங்களுக்கான சிருவர்களுக்கான புத்தகத்தில் ஜே சி பைல் (பிலடெல்பியா பென்சில்வேனியா வட அமெரிக்க சுவிசேஷ லுத்ரன் திருச்சபை, 1885) சில பதிப்புக்கள் மார்டீன் லுத்தர் இயற்றியதாக தவராக கூருகிறது. ஏனெனில் இதை இயற்றிய ஜேம்ஸ் மர்ரே சிறுவர் சிறுமியருக்கான டெய்ன்டி பாடல்கள் எனும் புத்தகத்தில் இப்பாடலுக்கு தலைப்பாக லுத்தரின் தொட்டில் பாடல் என குரிப்பிட்டுள்ளார்கள். (சின்சினாட்டி ஒஹியோ யோவான் ஆலையம் 1887). 3ஆம் சரணம் ஜான் தாமஸ் மெக்பார்லேன்ட். சௌ. ஜான் பாரதி (டிசம்பர் 21, 2018),

கிரேடில் சாங், வில்லியம் ஜேம்ஸ் கிர்க்பேட்ரிக் 1895 ஜேம்ஸ் எட்வர்ட் ஸ்பில்மேன் அவர்களின் அப்டேன் எனும் இராகத்திலிருந்து (🔊 pdf nwc).

உருவப்படம்
வில்லியம் கிர்க்பேட்ரிக் (1838–1921)

மாடடை குடில் ஒன்றில்
கட்டில் மெத்தை இன்றி,
நம் பாலன் இயேசு தூங்க
வெறும் புல் தான் மெத்தை,
விண் நட்சத்திரம் காண
அவர் தூங்கும் இடம்,
நம் ஏழை இயேசு பாலன்
புல் மீதுறங்க.

மா மோ மே பசு காளை
சப்தம் கேட்டு எழ,
ஆனால் விந்தை இயேசு பாலன்
அழவே அழாமல்,
நான் உம்மை நேசிக்கின்றேன்
என்னை பாரும் நீரே,
என் அருகே இரும் காரும்
காலை வரை.

நான் உம்மை வேண்டுகின்றேன்
என்னோடே இரும்,
என் சமீபம் என்றும்
தங்கி நேசித்திடும்,
என்னைப்போல் எல்லோரையும்
நேசிப்பீர் நம்புவேன்
எம்மை உந்தன் பிள்ளையாக்கும்
உம்மோடென்றும் வாழ.