என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும்.@சங்கீதம் 31:15
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

ஆனி ஸ்டீலே, ஆன்மிக கவிதைகள் 1760 (Awake, My Soul, nor Slum­ber­ing Lie). சௌ. ஜான் பாரதி, ஏப்ரல் 26, 2020.

டியூக் ஸ்டிரீட், ஜான் ஹட்டன், 1793 (🔊 pdf nwc).

விழித்தெழுவாய் என் ஆன்மமே,
ஆழ் மரணத்தின் திகில் நடுவே,
வந்திடுதோ அந்நேரமே,
கொண்டு செல்ல என் கடை மூச்சில்.

வரும் அந்த நேரம் விரைவினிலே,
காலத்தின் சிறகினில் வந்திடுதே,
இன்பமும் பட்டதுன்பங்களும்,
இமைப்பொழுதில் மறைந்தொழியும்.

என்னையும் எந்தன் சுற்றோரையும்
யார் தடுப்பார் அந்தக்ஷணமதிலே,
தொடர்ந்தெனக்களித்த எச்சரிக்கை,
கேட்டேனோ நான்?அதையறியேன்.

வேடிக்கை கேளிக்கை தோன்றிடுதே,
திகில் பயம் என்னை சூழ்கையிலே,
மரணத்தின் அம்புகள் பறந்திடுமோ,
திண்ணமாம் பாயும் ஆழ் காயமே.

என் மனமே நீ உணராயோ?
அனுதினமும் சில நொடிப்பொழுதும்,
தயவாய் வானின்று தரப்பட்டதே,
அசட்டையாய் தள்ளி எறிந்தோமே.

எஞ்சிய காலம் பயன் படுத்து,
எழுந்தே யாவையும் ஆதாயம் செய்,
கனவில்லா வேலையில்லா செற்ப்ப காலம்,
விலைமதியாது உணர்ந்திடு நீ.

என் வாழ்வின் ஆண்டவர் நீரே,
தயவாய் கிருபையால் ஈந்தீரே,
என்னைவிட்டே அகலாதிரும்,
வாழ்வும் சாவும் உம் கரமே.

போதித்தே என்னை ஞானத்தினால்,
ஒவ்வொரு தருணமும் பயன்படுத்த,
என் காலம் குருகியே வந்திடுதே,
பேரின்ப வாழ்வுக்காய் திடப்படுத்தும்.

மேலோக வாழ்வுக்காய் திண்ணமாக,
கிறிஸ்துவின் இரத்தத்தால் வாழ்வடைய,
என் காலம் விரைவாய் சென்றிடினும்,
அருகிருந்தென்னை தேற்றிடுமே.