நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.@சங்கீதம் 17:15
உருவப்படம்
தாமஸ் கென்
(1637–1711)

தாமஸ் கென், 1674 (Awake, My Soul, and with the Sun). சௌ. ஜான் பாரதி (2018),

பழைய நூராவது, லூயிஸ் பொர்கியோஸ் அவர்களின் படைப்பாக கருதப்படுகிறது போர் ஸ்கோர் அண்டு செவன், தாவீதின் சங்கீதங்கள், (ஜெனீவா சுவிட்சர்லாந்து 1551) (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

சூரியனுடன் விழித்தெழு
அன்றன்றுள்ள வேலை நீ செய்,
சோம்பல் தள்ளி உற்சாகமாய்,
இந்நாள் பங்கை செய் பலியாய்.

உன் காலம் நேரம் காப்பாயே,
ஒவ்வொரு நாளும் வெகுமதி,
உன் தாலந்தை வளர்த்திடு,
அந்நாளுக்காய் உன்னை காப்பாய்.

சம்பாஷணையில் தூய்மையாய்,
உன் மனசாட்சி தெளிவாய்,
உன் உள், புரம் காண்பார் தேவன்,
உன் சிந்தை அவர் காண்கிறார்.

விழித்தெழு என் மனமே,
தூதரின் கீதம் சேர்ந்திடு,
இரா பகலாய் அழைக்கிறார்,
இராஜாவாய் என்றும் ஆள்பவர்.

பாடகர்க்குழாம் நீர் எழுவீர்,
உம் பக்தி பண் நீர் எழுப்ப,
நான் உம்மைப்போல் என் வாழ்விலே,
ஆராதித்தே நான் கழிப்பேன்.