சாயங்காலமாகிச் சூரியன் அஸ்தமித்தபோது, சகல பிணியாளிகளையும், பிசாசுபிடித்தவர்களையும், அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். பட்டணத்தார் எல்லாரும் வீட்டு வாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள். பலவிதமான வியாதிகளினால் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகள் தம்மை அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு அவர் இடங்கொடுக்கவில்லை.@மாற்கு 1:32–34
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

ஹென்றி ட்வெல்ஸ், 1868 (At Ev­en, Ere the Sun Was Set). சௌ. ஜான் பாரதி (மார்ச் 28, 2020),

ஏஞ்சலஸ், ஜார்ஜ் ஜோசப், 1657 (🔊 pdf nwc).

உருவப்படம்
ஹென்றி ட்வெல்ஸ்
1823–1900

ஆம் சூர்யன் சாயும் நேரமே,
நோவுற்றோர் உம்மை சூழ்ந்தனர்,
உபாதை வேதனை கொண்டோராய்,
வந்தனர் மகிழ்ந்தே சென்றனர்.

இந்நாளும் மாலையானதே,
துன்பற்றோர் இன்றும் வந்திட்டால்,
உம்மை யாம் காண கூடுமோ?
நீர் சமீபம் என்றறிவோம்.

எம் வேதனை நீர் தீர்ப்பிரே,
துக்கத்தால் சோர்ந்து நோயினால்,
உம்மையே நேசிக்காதோறும்,
அன்பானோர் தம்மை இழந்தோறும்.

பூலோக பாரம் தாங்காமல்,
பாவத்தின் சோர்வும் நீங்காமல்,
துக்கத்தில் மூழ்கி மீளாமல்,
நீரின்றி யார்? மீட்ப்பார் எம்மை.

இப்பூவின் மாயை அறிந்தோர்,
ஆனாலும் மீளாதோருண்டு,
நண்பரால் வேதனை கொண்டோரும்,
உம் நட்பை அறிந்திடாதோரும்.

யாம் யாரும் நல்லோய்வு கொள்ளோமே,
பாவமற்றோர் எம்மில் இல்லை,
சாந்தமுள்ளோர் சேவை செய்வார்,
தன் தன் பாவம் நன்றறிவார்.

ஆம் நீரும் மானுடனல்லவே?
சோதனை வேதனை அறிவீரே,
உந்தன் காருண்யம் காணுமே,
மறைவாம் காயம் தெளிவாய்.

உம் கைகள் தொட்டிட வல்லமை,
உம் வார்த்தை ஒன்றும் வீணாகா,
இம் மாலை எம் ஜெபம் கேளுமே,
உம் கிருபையால், நீர் குணமாக்கும்.