சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.@யோவான் 14:27
உருவப்படம்
ரிச்சர்டு வெ ஆடம்ஸ் (1952–)

ரிச்சர்டு வெ ஆடம்ஸ், ஜூலை 1, 2009 (As Sha­dows Length­en): இப்பாடலை என் தாய் பெட்டி ஆடம்ஸ் அவர்களை தூய லூயிஸ் மருத்துவ இல்லத்தில், அல்சைமர் எனப்படும் நோயினால் பாதிக்கப்பட்டு தன் உடலின் பல்வேறு உறுப்புக்கள் செயலிழக்கவும் கண்டு, திரும்பி வந்தபின் எழுதி, உயிர்த்தெழுதலின் நம்பிக்கையில் நாம் பூரணமானவர்களாய் என்றும் அழியா சரீரத்துடன் வாழ்வோம் என்று எடுத்துக்கொள்கிறேன். சௌ. ஜான் பாரதி (செப்டம்பர் 17, 2018),

ஈவன்டைட், வில்லியம் ஹெச் மாங்க், 1861 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி (1960–)

நிழல்கள் நீண்டு இருள் சூழுதே
நாளை என்ன நேறும் என்றறியோமே
உம் சித்தம் செய்தோம் தாரும் அமைதி
உம் அன்பை நம்பினோம் நீர் காப்பீரே.

ஒன்றை யாம் கேட்போம் இந்நல் மாலையில்
மனக்கண்ணில் காட்டும் எம் இடம் எங்கோ
மேனி மெலிந்தே கண்கள் மங்குதே
உம் அன்பை கூரும் காட்சி காட்டிடும்.

சாட்சியாய் சொல்ல எம் சந்ததிக்கே
வாக்கு மாறா உந்தன் வார்த்தை உண்மையை
சா மட்டும் காக்கும் வல்ல தயவை
காத்து வழி நடத்தும் நண்பன் நீர்

எங்கள் ப்ரயாசம் இங்கு முடிந்தே
மரணத்தின் தூதன் பாடல் கற்கவே
விசுவாசத்தோடே மேலே பறந்தே
வானத்திற்கப்பால் தங்க சாலைக்கே