பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு; நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு.@பிரசங்கி 3:2
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

சார்லஸ் வெஸ்லி, 1763 (And Am I Born to Die?). சௌ. ஜான் பாரதி (ஏப்ரல் 25, 2020),

இராகம் பிராங்கோனியா, யோஹான் பல்தாசர் கோனிக், 1738 (🔊 pdf nwc).

portrait
சார்லஸ் வெஸ்லி
(1707–1788)

சாகப்பிறந்தேனா?
என் சரீரம் மாய?
என் ஆவி பறந்தேகுமா?
அறியா உலகே.

இருள் சூழ்ந்த தேசம்,
எண்ணி பார்க்கக்கூடா,
மாண்டோர் கூடும் இடமிதோ?
மறந்தொழிந்ததோ?

உலகை விட்டேகி,
நான் எங்கே சேர்வேனோ?
நித்ய மகிழ்ச்சியோ? வேறோ?
இதில் எனக்கெதோ?

எக்காள சப்தமே,
கேட்டே நான் எழவே,
மகிமை கிரீடம் சூடியே,
நீதியின் இராஜனாம்.

எவ்வாறே நான் எழ?
வென்றோ? வருந்தியோ?
பயந்தோ? அன்றி மகிழ்ந்தோ?
சாபமோ? ஆசீரோ?

தூதர் கூட்டத்தோடோ?
துதிப்போர் சேனையோ?
ஆன்மாவை சாத்தான் பற்றவோ?
தன் கடன் தீர்க்கவே.

சந்தேகம் தீர்ப்பார் யார்?
நெஞ்சம் பிளந்ததே,
தள்ளப்பட்டோனாகவோ நான்?
ஆசீர் பெற்றோரோடோ?

விரட்டப்பட்டோனோ?
என் மீட்பருடனோ?
கட்டளை கேட்டோனாய் விண்ணில்,
அல்ல நரகிலோ?

ஆமேன்.