நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்.@யோவான் 9:25
உருவப்படம்
ஜான் நீயூட்டன்
1725–1807

ஜான் நீயூட்டன், 1779 (Am­az­ing Grace). சௌ. ஜான் பாரதி (2018),

நியூ பிரிட்டன், விர்ஜினியா ஹார்மனி, 1831 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

என் தந்தை அருள்திரு.எ.சௌந்தரராஜன் சென்னையிலுள்ள சகல பரிசுத்தவான்கள் ஆலயத்தில் ஆயராக இருந்த சமயம் நான் ஓய்வுநாள் பள்ளியிலிருந்து ஒவ்வொரு வாரமும், கிட்டார் இசைத்து பாடிக்கொண்டிருக்கும் வாலிபர்கள் குழு கூடியிருக்கும் இடத்திற்குச்சென்று அவர்களின் கிட்டார் இசையையும் பாடலையும் ரசிப்பது வழக்கம். அதை கவனித்த ஒரு சகோதரன் என் தந்தையிடம் என்னை வகுப்புக்கு அனுப்பும்படி சொல்லவே, கோடை விடுமுறையின் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஆறு மணிக்கெல்லாம் அவர் தங்கியிருந்த அறையிலிருப்பேன், அவர் படுக்கையிலிருந்தவாரே, கிட்டாரை ஸ்ருதி ஏற்றுவது முதல் விரல்களை வைப்பது மற்றும் ஸ்டிரம் செய்வது பற்றியும் சொல்லி தந்து அவர் பாடவும் என்னை இசைக்கவும் செய்வார். அதற்கு அடுத்த வருடம் முதல் நானும் இசைக்கவும் நண்பர்களுக்கும் கற்றுத்தரவும் ஆரம்பித்தேன். இப்பாடலை நான் முதல் முதலாக என்னுடைய மாணவி இதை பாடி எனக்கு இசைக்க கற்றுத்தரும்படி கேட்டபோதுதான் கேட்டு அவளிடம் அப்பொழுது கற்றுக்கொண்டேன். அதன் தமிழாக்கத்தை இதுவரை காணாததினால் மொழி பெயர்க்கிறேன், மேலும் நான் இசைகருவிகள் கற்றுத்தரும்போதெல்லாம் இதுவே முதல் பாடலாகவும் இருக்கின்றது. தமிழிசையின் மோகனம் என்னும் எளிதானதும் அனைவராலும் விரும்பப்படும் இராகத்தைப்போல் (இதன் ஆரம்ப ஸ்ருதியை தவிர) அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சௌ. ஜான் பாரதி, 2018

மகா அற்புதம்,
மா பாவியாம் என்னை
மீட்ட உம் அன்பு
தொலைந்தலைந்தேனே
என்னை கண்டீரே, கண்
காணேனிப்போ காண்கிறேன்.

உம் கிருபையினால்,
நான் நடுங்கி,
உம் தயவால் மீண்டேன்
உம் காருண்யம்தான்
என் ஆஸ்தியாம்,
நான் நம்பினவேளை முதல்.

என் வாழ்வில்
நான் கடந்தது,
துன்பம் மா வேதனை,
உம் வல்லமை,
இம்மட்டுமே
வழி நடத்திற்றே.

என் தேவன்
எனக்காய்த்தந்த,
தம் வாக்குதத்தம் உண்மை
அவர் என்னை
தற்காப்பாரே,
வாழ் நாள் முழுதுமே.

என் மாம்சமும்
என் துடிப்பும்,
நின்று நான் சாகையில்
என்னுள்ளில் அவர்
தந்ததே, இன்ப சமாதானமே.

பனி போலவே,
இவ்வுலகம்,
சூர்யனும் தோன்றாதே,
நம் தேவன் இன்றும்
என்றும் உண்டங்கே,
இருப்பார் நம்முடன்.

அங்கே நாம் என்றும்
வாழ்வோம் நித்யம்,
பிரகாசமாய் தோன்றி,
என்றென்றும் நாம் அவர்
துதி பாடி போற்றி மகிழ்வோம்.