இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.@சங்கீதம் 91:5–6
உருவப்படம்
லுத்தர் ஓ எமர்சன்
(1820–1915)

மெல்வியா பூக்கர், 1918 (All Thru the Night). சௌ. ஜான் பாரதி (2018),

அர் ஒய் ஹைடு நாஸ், வெல்ஷ் இராகம்; குழுவாக பாடுவதற்கேற்ப ஒழுங்கு படுத்தியவர் லுத்தர் ஓ எமர்சன் 1906 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

நான் 1992 ல் 5 வருடங்களுக்குமேல் வெளி நாடுகளிலிருந்து விட்டு தாயகம் வந்ததும் என் தங்கைக்கு பிறந்திருந்த ஆண் குழந்தையை கண்டு அவள் இல்லத்தில் சிறிது ஓய்வெடுத்து வரும்படி சென்றிருந்த சமயம் அவள் குழந்தையை தூங்கச்செய்ய பாடிய பாடல்களை கவனித்தபோது மனதிற்குள்ளே ஆச்சரியமும் வியப்பும் அடைந்தேன், ஏனெனில் அவள் மீண்டும் மீண்டும் பாடிய அம்மூன்று பாடல்களும் மரித்தோரை அடக்கம் செய்யும் ஆராதனைப் பாடல்கள், 1. உம்மண்டை கர்த்தரே, 2. பிளவுண்ட மலையே 3. எருசலேம் என் ஆலையம், அப்போது அமைதியாக கவனித்துக்கொண்டிருந்த நான் சிரித்துக்கொண்டே ஏன் இந்த பாடல்களைப் பாடுகிறாய் ? இவையனைத்தும் மரண சமயங்களில் பாடுவது என்பது உனக்கு தெரியுமே என்றதும், அவளும் சிரித்துக்கொண்டே இந்த பாடல்கள்தான் என் குழந்தையை தூங்கச்செய்கிறது என்று சொல்லி என்னை வியப்பிலும் யோசனையிலும் ஆழ்த்தினாள், அங்கிருந்து புறப்படுமுன் அர் ஒய் ஹைடு நாஸ் என்ற இந்த பாடலின் மூல தாலட்டு பாடலாகிய “Sleep my Child and Peace attend Thee” என்ற பாடலை ஆங்கில வசனத்துடன் அவளுக்கு பாடி காண்பித்து ராகத்தை மட்டும் கற்று தந்தேன், அவள் அதை பின்பு பாடினாளா என்பது எனக்கு தெரியாது. சில நாட்களுக்குப்பின் என் அலுவலகத்திற்கு வந்த கேரளத்தை சேர்ந்த பேராயர் ஒருவர் மேற்கண்ட இந்த பாடலின் ராகத்தை பாடி, இதே ராகத்தில் ஒரு பாமாலை இருக்கிறது தெரியுமா? அதன் வசனங்கள் வேண்டும், என கேட்க நான் சைபரில் கண்டெடுத்து அவருக்கு அனுப்பிவைத்தேன். நம் தாய்மார்களுக்கு தங்கள் குழந்தைகளுக்கு தாலாட்டாக பாட இந்த பாடலை அறிமுகப்படுத்தலாமே!

சௌ. ஜான் பாரதி, 2018

எந்தன் இயேசு என்னை காப்பார், இரா முழுதும்,
தன் அநாதி தீர்மானமே முன்னே செல்வார்,
பாவ இருள் சாவு துக்கம், பாதுகாத்து காலைமட்டும்
இந்த லோகின் கடன் வேண்டாம், இரா முழுதும்.

இராவின் இருள் நீண்டு நிழல் சூழ்ந்திடுதே,
சாத்தான் எந்தன் பாதை சுற்றி இரா முழுதும்
எந்தன் பாதை இயேசுஸ்வாமி ஆபத்தின்றி
பாரமெல்லாம் இலகுவாக்கி, பயமின்றி இரா முழுதும்.

கேள், அதோ ஓர் மென்குரல்தான், இரா முழுதும்,
ஆண்டவரின் அன்பு குரல், கேள் கேள் இதோ,
எத்திசையும் எந்த நாடும்,
நியாயத்தீர்ப்பின் நீங்கலாமோ?
பூமியின் மாஇருள் காலம் இரா முழுதும்.

நீதியின் மா சூர்யன் வர, இரா போகுமே,
அந்த நாளும் வேகம் வரும், இரா நீங்குமே,
தூங்கும் தூயர் துயில் எழ,
சேர்ந்து நாமும் பாடி போற்ற
வேந்தரென கிரீடம் சூட இரா ஓயுமே.