அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக்கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம்பண்ணி, அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள்.@மத்தேயு 27:28–30

ஹேடன் லாயிட், 20ம் நூற்றாண்டு (All for Me). சௌ. ஜான் பாரதி (ஏப்ரல் 10, 2020),

எல்லாம் எனக்காய், ஹேடன் லாயிட் 20ம் நூற்றாண்டு (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

துன்புறும் மீட்பர் இதோ
இரத்தம் சிந்தும் காயம் பார்,
நொந்து வீழ்ந்து அயர்ந்து,
மயங்கி நொருங்கியே,
எனக்காய், எனக்காய்.

என்தன் மீட்பர் எனக்காய்
தூயவர் மா தூயோரே,
உந்தன் பிள்ளையன்றோ நான்,
ஆசீர் தந்து மீட்டிடும்,
இயேசுவே, என்னையே.

வீழ்ந்தே நானும் வந்திட்டால்
கிருபையாய் நீர் ஏற்பீரே,
தயவாய் உம் ராட்ஜியம்
அலைந்தோடும் என்னையே,
சேர்ப்பீரே, உம்மோடு.