அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்@மத்தேயு 1:20–21
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

அசிசியின் பிரான்சிஸ் சுமார் 1225, கேன்டிகோ டி பிராட்ரே சோலே, சூரிய சகோதரனின் பாடல், இவர் மரிக்கும் சில மணித்துளிகளுக்கு முன் இந்த பாடலை இயற்றினார், ஆயினும் 400 வருடங்களாக வெளியிடப்படாமலிருந்தது. வில்லியம் ஹென்றி டிராப்பர் அவர்களால் ஆங்கிலத்தில் பரிசுத்தாவி திருநாளில் சிறுவர்கள் பாடுவதற்காக மொழிபெயர்த்தார் லீட்ஸ் இங்கிலாந்து, முதன்முதல் பொதுமக்கள் பள்ளி பாடல் புத்தகத்தில் வெளியானது 1919 (All Crea­tures of Our God and King). சௌ. ஜான் பாரதி (பிப்ரவரி 15, 2019),

லாஸ்ட் உன்ஸ் எர்பரூஎன், லாஸ்ட் உன்ஸ் எர்பரூஎன் ஆசர்லசேன் கேத்தோலிஸ்ச் கீஸ்ட்லிச் கிர்ச்செங்வாங், கோலோன் ஜெர்மனி பீட்டர் வோன் பிராச்சல் 1623, ஒத்திசை அமைத்தவர் ரால்ப் வோன் வில்லியம்ஸ், ஆங்கில பாடல் புத்தகம் லண்டன் ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டி பிரெஸ் 1906. எண் 519 (🔊 pdf nwc).

உருவப்படம்
ரால்ப் வாகன் வில்லியம்ஸ்
(1872–1958)

எல்லா படைப்பும் ஒன்றாக,
வல்ல நம் இராஜன் போற்றுவோம்,
அல்லேலூயா அல்லேலூயா
நீர் மா பிரகாச சூரியன்,
மென் வெள்ளி ஒளி சந்திரன்,

பல்லவி

பல்லவி போற்றுவோமே, புகழ்பாடி,
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

ஓங்கியே வீசும் காற்றே நீ,
வானிலுலவும் முகிலே,
அல்லேலூயா அல்லேலூயா
மெல்ல எழும் நிலவே நீ,
மாலை மின்னும் சிற்றொளியே,

பல்லவி

ஓடும் தெளிர் நீரோடையே,
பாடலொன்றை நீ பாடியே,
அல்லேலூயா அல்லேலூயா
வன் சக்தி தரும் ஜுவாலையே,
நீ தரும் அனல் ஒளியும்,

பல்லவி

பூமித்தாயே, நாளும் நீ,
ஆசீர் பொழிந்தென்னாளும்,
அல்லேலூயா அல்லேலூயா
பூ காய்கள் கனிதரும் நீ,
யாவும் நல் ஆசீர் பேணுதே,

பல்லவி

மென் மனம் கொண்ட மாந்தரே,
மன்னித்தும் பங்கை படைப்பீர்,
அல்லேலூயா அல்லேலூயா
துன்பத்தினூடே துக்கித்தே,
யாவும் வைப்பீரவர் பாதம்,

பல்லவி

நன் மரணமே இனிமை,
காத்திரு என் கடைஸ்வாசம்,
அல்லேலூயா அல்லேலூயா
என் தந்தை வீடே சேர்த்திட,
கிறிஸ்தேசு சென்ற பாதையில்,

பல்லவி

.யாவும் கர்த்தரை போற்றட்டும்,
தாழ்மையாய் வீழ்ந்து குனிந்து,
அல்லேலூயா அல்லேலூயா
தந்தை சுதன் தூயாவியே,
மூவராம் ஏகர் போற்றுவோம்.

பல்லவி

…ஆமேன்