கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்; கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர்.@சாமுவேல் 22:29
உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
1960–

அன்னா லெயேடிட்டா அய்கின் பார்பவுல்ட், 1772 (Again the Lord of Light and Life). சௌ. ஜான் பாரதி (ஈஸ்டர் 2020),

இராகம் தூய ஆக்னஸ், ஜான் பாக்கஸ் டைக்ஸ், 1866 (🔊 pdf nwc).

portrait
அன்னா லெயேடிட்டா அய்கின் பார்பவுல்ட்
1743–1825

வாழ்வின் ஒளி நம் ஆண்டவர்,
மீண்டே எழுந்தேகி, காலையின்
கண்ணிமை திறந்து,
வந்தார் இன்னாளிலே.

ஆ என்ன இரா சூழ்ந்தணைத்ததே,
நம்பாத மாந்தரை,
மெய் சூர்யனும் எழுந்ததே,
சாவை விட்டேகியே.

மெய் கனம் மேன்மை தங்குமே,
இன்நாளில் ஓசன்னா,
எல்லோரும் எழுந்து பாடட்டும்,
போற்றி ஆனந்தமாய்.

ஆயிரம் நாவு சேர்ந்தொன்றாய்,
இன்நாளைப் போற்றவே,
ஆசீர் பொழியும் சிறகிதே,
உள்ளோர் வருவோர் மேல்.

மானுடர் நண்பர் இயேசுதாம்,
மனதுருகியே,
வந்திங்கு மா கனிவுடன்,
நேசித்தோரை மீட்க.

இருளின் போராட்டம் வீணாகும்,
மாய்க்குமோ மாந்தரை,
விழ்ந்திட்ட ராட்ஜியம் அதுவன்ரோ?
மாய்ந்ததே மூச்சின்றி.

பாதாளம் முயன்றும் வைத்திராதே,
யூதாவின் வம்சம் நம்மை,
ஊழலோ ஏமாற்றோ கவ்வாதே,
தூயாராயின் நம்மை.

சங்காரக்காரன் இரங்கியே,
வானின்று இரதத்திலே,
நொருங்க வீழ்ந்தே சிலுவை மேல்,
சாவின் கூர் ஒடிந்ததே.

ஆண்டவர் தம் வலக்கரம்,
மண்ணோர் நம் யாவர்க்கும்,
மன்னிக்கும் அன்பதாம் அன்பது,
எண்ணில்லா ஆசீராம்.

குற்றமுள்ள மானிடர் மேல்,
இரக்கம் தயவாக,
குருதி சிந்தும் இதயமே,
துயரம் மரவாதே.

என் மீட்பரே எம் இராஜனே,
மகிழ்ந்தே பணிவேனே,
உம்மைப்போல் சாக துணிந்திட்டே,
உம்மோடென்றும் வாழ.ஆமேன்.