பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது.@யோவான் 9:4
portrait
வில்லியம் ஹென்றி பர்லே
(1812–1871)

வில்லியம் ஹென்றி பர்லே, 1871 (Abide Not in the Realm of Dreams). சௌ. ஜான் பாரதி (ஏப்ரல் 17, 2020),

இராகம் டியூக் ஸ்ட்ரீட், ஜான் ஹட்டன், 1793 (🔊 pdf nwc).

உருவப்படம்
சௌ. ஜான் பாரதி
(1960–)

கனவுலகில் சஞ்சரிக்காதே
உனக்கது நியாயமாய் தோன்றினாலும்
பார் நீ கண் திறந்து உன் சூழலை
கேட்பாய் நீ தேவ குமாரன் சொல்

உரக்கத்தில் யோசித்தே கரம் கட்டி
மரந்து நீ ஆண்டவர் கட்டளை
கடமையுண்டு ஒவ்வோர் உயிர்க்கும்
இன்னாளைப்பார் உனக்கும் உண்டு

இக்ஷ்சணம் உன் பணி காணாயோ?
பொறுமையும் வலிமையும் கேள் தருவார்
அவர் அன்புதருமுனக்கவசியமே
ஏராளமாய் உன் தேவைக்காய்.