என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்.@யோவான் 14:14
ஓவியம்
சிவில்லா மார்ட்டீன் (1866-1948)

சிவில்லா மார்ட்டீன், 1904 (God Will Take Care of You); ராஜா, 2011. .

ஸ்டில்மன் மார்ட்டீன் (🔊 pdf nwc).

ஓவியம்
ஸ்டில்மன் மார்ட்டீன் (1862-1935)

துவளாதே, என் மனமே, நீ;
பார்த்துக் கொள்வார் தேவன்.
அவரன்பு செட்டையுனுள் நில்,
பார்த்துக் கொள்வார் உன்னை.

பல்லவி

பார்த்துக் கொள்வார் உன்னை.
என்றென்றுமே, எவ்வேளையும்.
பார்த்துக் கொள்வார் அவர்.
தேவன் பார்த்துக் கொள்வார்.

இதயம் நொருக்கும் காலமும்
பார்த்துக் கொள்வார் தேவன்.
பேராபத்தான வழியிலும்,
பாதுகாத்திடுவார்.

உன் வாழ்வின் தேவை யாவையுமே,
சந்திப்பார் நல்தேவன்.
கேட்பதை மாட்டேனெனார் என்றும்,
கவனிப்பாரென்றும்.

எச்சோதனையில் நீ சென்றாலும்,
பார்த்துக் கொள்வார்தேவன்.
அவர் மார்பினில் இளைப்பாரு,
காத்துக் கொள்வார் தேவன்.